தமிழ்நாடு
வடபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா இன்று தொடங்கியது
- பங்குனி உத்திரத்தை முன்னிட்டு லட்சார்ச்சனை மற்றும் தெப்பத்திருவிழா இன்று தொடங்கி வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.
- இன்று காலை யாக சாலை பூஜைகளுடன் லட்சார்ச்சனை தொடங்கியது.
சென்னை:
வடபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு லட்சார்ச்சனை மற்றும் தெப்பத்திருவிழா இன்று தொடங்கி வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இன்று காலை யாக சாலை பூஜைகளுடன் லட்சார்ச்சனை தொடங்கியது. வருகிற 23-ந்தேதி மாலை வரை லட்சார்ச்சனை நடக்கிறது.
வருகிற 24-ந்தேதி பங்குனி உத்திரத்தன்று உச்சி கால தீர்த்தவாரி மற்றும் கலசாபிஷேகத்துடன் பூஜைகள் நடைபெறுகின்றன. அன்று இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. வருகிற 25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை இரவு 7 மணிக்கு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.