சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை- அரசியல் தலைவர்கள் கருத்து
- செருப்பை கழற்றியும், சவுக்கால் அடித்துக்கொண்டும் அற்ப அரசியல் செய்கிறார் அண்ணாமலை.
- நியாயமாக தமிழக மக்கள்தான் அண்ணாமலையை சாட்டையால் அடிக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தினார். வீட்டு வாசலில் சாட்டையால் சட்டை அணியாத உடலில் தனக்கு தானே அடித்துக் கொண்டார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:
* அண்ணாமலை சவுக்கால் அடித்துக்கொண்டதை பார்த்தேன். மீண்டும் அவர் பயிற்சி எடுக்க வேண்டும்.
* செருப்பை கழற்றியும், சவுக்கால் அடித்துக்கொண்டும் அற்ப அரசியல் செய்கிறார் அண்ணாமலை.
* அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை விவகாரத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
* அண்ணாமலை லண்டனில் சென்று படித்தாரா? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியதாவது:
* அண்ணாமலையின் போராட்டம் நகைப்புக்குரியதாக மாறி விட்டது.
* பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஜனநாயக ரீதியாக அண்ணாமலை போராடி இருக்கலாம்.
* சட்ட ரீதியான போராட்டத்தையும் அண்ணாலை முன்னெடுத்து இருக்கலாம்.
* தன்னை வருத்திக்கொள்ளும் அண்ணாமலையின் போராட்டம் நகைப்புக்குரியதாக மாறி விட்டது என்று கூறினார்.
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியதாவது:
* தமிழக மக்கள் தான் அண்ணாமலையை சாட்டையால் அடித்திருக்க வேண்டும்.
* மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்று தர அண்ணாமலை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
* உண்மையான பிரச்சனையை மடைமாற்றும் வேலையை செய்கிறார் அண்ணாமலை.
* நியாயமாக தமிழக மக்கள்தான் அண்ணாமலையை சாட்டையால் அடிக்க வேண்டும் என்று கூறினார்.