இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது
- இந்துக்களை தாக்கிய காலிஸ்தான் பயங்கரவாதிகளை அடக்க கனடா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட இருந்தது.
- இந்திய தூதரக அதிகாரிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கனடா கூறியது.
கனடாவில் இந்து கோவிலுக்குள் பக்தர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் போராட்டம் நடத்த இருந்தார்.
இந்துக்களை தாக்கிய காலிஸ்தான் பயங்கரவாதிகளை அடக்க கனடா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட இருந்தது.
இந்நிலையில் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போராட்டத்திற்கு முன்பே அர்ஜூன் சம்பத் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக, கனடாவில் வசித்த காலிஸ்தான் அமைப்பு தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் இவ்விவகாரத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கனடா கூறியது.
இதற்கிடையே கனடாவின் பிரம்ப்டன் நகரில் இந்து கோவிலுக்குள் காலிஸ்தான் ஆதரவாளர்கள் புகுந்து பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.