நேபாளத்தை உலுக்கிய விபத்து... தரையை நோக்கி பாய்ந்து வரும் விமானம்... வைரலாகும் வீடியோ
- விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
- விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது
காத்மாண்டு:
நேபாளத்தில் பொக்காரா விமான நிலையம் நோக்கி 72 பேருடன் சென்ற விமானம், தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, விமான நிலையத்தின் அருகில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பற்றியது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 68 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், நேபாள விமானம், கட்டுப்பாட்டை இழந்து பலத்த சத்தத்துடன் தரையை நோக்கி பாய்ந்து வரும்போது பதிவு செய்யப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.
விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து நேபாள அரசு நாளை ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கிறது.
Horrifying last moments of an ATR plane crash from Nepal in Pokhara that was bound for Kathmandu. All 72 people on board are dead. pic.twitter.com/4JZIvnThPQ
— Wajahat Kazmi (@KazmiWajahat) January 15, 2023