- புதுவை பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மூடப்பட்டுள்ள ஏ.எப்.டி., சுதேதி, பாரதி மில்களை உடனடியாக திறந்து நடத்த வேண்டும்.
- இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உறுதிபடுத்த வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மூடப்பட்டுள்ள ஏ.எப்.டி., சுதேதி, பாரதி மில்களை உடனடியாக திறந்து நடத்த வேண்டும்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உறுதிபடுத்த வேண்டும். மாநில பொருளாதாரத்தை நிலை நாட்ட என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சட்டமன்றம் அருகே ஆம்பூர் சாலை சந்திப்பில் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. பஞ்சாலை சங்க தலைவர் அபிஷேகம் தலைமை வகித்தார். செயலா ளர் மூர்த்தி, பொருளாளர் பூபதி முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
போராட்டத்தில் பஞ்சாலை சங்க நிர்வாகிகள் ரவி, தேசிகன், சுப்பையா, இளங்கோ, பச்சையப்பன், முனியாண்டி, ஏழுமலை, திருஞானமூர்த்தி, ராஜூ, முருகன், ஜெயசதீஷ், ஏ.ஐ.டி.யூ.சி. பொருளாளர் அந்தோணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மூட்பபட்ட மில்களை திறக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. தொடர்ந்து நிர்வாகிகள் சட்டசபைக்கு சென்று முதல்-அமைச்சரிடம் மில்களை திறக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.