காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்கண்தான விழிப்புணர்வு பேரணி
- 38-வது கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- விழிப்புணர்வு பதாகைகளை எடுத்துச் சென்றனர்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்ட நலவழித்துறை சார்பில், காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 38-வது கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, நிலைய டாக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். செவிலிய அதிகாரி ஜெகதீஷ் அனைவரையும் வரவேற்றார். சித்த மருத்துவர் மலர்விழி, திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் ஞான பிரகாசி, சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார் ஆகியோர் முன்னில வகித்தனர். தொடர்ந்து, மருத்துவ அதிகாரி அரவிந்த் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழிப்புணர் பேரணியில் கலந்து கொண்ட அம்பகரத்தூர் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கண்தானத்தை ஊக்குவிக்கும் விதமாக பார்வை இழந்தோர் பார்த்து மகிழ கண்களை தானம் செய்யுங்கள் என்று தங்கள் கண்களை கருப்பு ரிப்பன்னால் கட்டிக்கொண்டு பார்வையற்றவர்கள் நடப்பது போல் நடந்து விழிப்புணர்வு பதாகைகளை எடுத்துச் சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராமப்புற செவிலியர் பரமேஸ்வரி, விவேதா மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சி இறுதியில் கண்தான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.. முடிவில் பள்ளி தமிழ் ஆசிரியர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.