மழைநீர் சேகரிப்பு குறித்து பயிற்சி முகாம்
- மழைநீர் சேகரிப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. காலாப்பட்டு வேளாண் அலுவலர் தண்டபாணி வரவேற்றார்.
- காலாப்பட்டு வேளாண் அலுவலர் தண்டபாணி வரவேற்றார்.
புதுச்சேரி:
புதுவை வேளாண் விவசாயிகள் நலத்துறை, பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம், ஆத்மா, காலாப்பட்டு காமராஜர் அறிவியல் நிலையமும் இணைந்து "மழைநீர் சேகரிப்பு" குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. காலாப்பட்டு வேளாண் அலுவலர் தண்டபாணி வரவேற்றார்.
வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியன் தலைமை உரையாற்றி தொடங்கி வைத்தார்.
வேளாண் அறிவியல் நிலைய பூச்சிகள் துறை தொழில்நுட்ப வல்லுனர் விஜயகுமார் நோக்க உரையாற்றினார்.
வேளாண்துறை பொறியியல் பிரிவு துணை வேளாண் இயக்குனர் பிரபாகரன், நீர் பாதுகாப்பு மற்றும் அவற்றின் அவசியம் குறித்து விளக்கி கூறினார்.
ஜெயச்சந்திரன் ஆரோ சொசைட்டி வீடுகளில் மழைநீர் சேகரிப்பு குறித்த நுணுக்கங்கள் மற்றும் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார்.
நிகழ்ச்சியில் புதுவை பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
ஆத்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஆதித்தன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாட்டை காலாப்பட்டு மற்றும் தவளகுப்பம் உழவர் உதவியக களப்பணியாளர்கள் மாசிலாமணி, பன்னீர்செல்வம், இளங்கோ, மாதவன் ஆகியோர் செய்திருந்தனர்.