மொபைல்ஸ்
null

வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த TRAI

Published On 2024-06-14 10:35 GMT   |   Update On 2024-06-14 10:38 GMT
  • மொபைல் எண்களுக்கு தனி கட்டணம் செலுத்தும் முறையை அமல் படுத்தபடும் என்ற செய்தி பரவிவந்தது
  • திட்டமானது தொலைதொடர்பு நிறுவனங்கள் மூலம் வசூலிக்கபட உள்ளதாக தொடர்ந்து செய்திகள் பரவி வந்தது.

மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI இனி மொபைல் எண்களுக்கு தனி கட்டணம் செலுத்தும் முறையை அமல் படுத்தபடும் என்ற செய்தி பரவி வந்தது

இந்த திட்டத்தின் மூலம் நாம் பயன்படுத்தும் மொபைல் மற்றும் லேண்ட்லைன் எண்களுக்கான கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளது. மேலும் இது ஒரு முறை அல்லது வருடாந்திர கட்டணமாகவும் அல்லது பிரீமியம் எண்களுக்கு ஏலம் விடுவது போன்ற முறைகளாகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டும், மேலும் இந்த திட்டமானது தொலைதொடர்பு நிறுவனங்கள் மூலம் வசூலிக்கபட உள்ளதாக தொடர்ந்து செய்திகள் பரவி வந்தது.

இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் ட்ரை நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது,

பல சிம்கள் மற்றும் தனி சிம்கள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு TRAI மூலம் கட்டணம் விதிக்கப்படும் என்ற செய்தி தவறானது. இத்தைய ஆதாரமற்ற மற்றும் பொதுமக்களை தவறாக வழிநடத்த மட்டுமே உதவுகிறது. இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.


Tags:    

Similar News