மத்திய அரசின் திடீர் முடிவு.. மொபைல் போன்களின் விலை விரைவில் குறைப்பு?
- முன்னணி நிறுவனங்கள் அதிகளவில் முதலீடுகளை செய்து வருகின்றன.
- மெட்டல் மூலம் உருவக்கப்பட்ட இதர மெக்கானிக்கல் பாகங்கள் அடங்கும்.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டு இருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்வதற்காக முன்னணி நிறுவனங்கள் அதிகளவில் முதலீடுகளை செய்து வருகின்றன.
அந்த வரிசையில், தற்போது இறக்குமதி வரி குறைக்கப்பட்டு இருப்பதால், ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய அறிவிப்பின் படி மொபைல் போன்களின் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி 15-இல் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
இதில் மொபைல் போன்களின் பேட்டரி கவர், முன்புற கவர், மிடில் கவர், மெயின் லென்ஸ், பேக் கவர், ஜி.எஸ்.எம். ஆன்டெனா, பி.யு. கேஸ், சீலிங் கேஸ்கெட், சிம் சாக்கெட், ஸ்கிரீயூ மற்றும் பிளாஸ்டிக், மெட்டல் மூலம் உருவக்கப்பட்ட இதர மெக்கானிக்கல் பாகங்கள் என அனைத்தும் அடங்கும்.
இறக்குமதி வரியை குறைக்க மொபைல் போன் உற்பத்தியாளர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.