search icon
என் மலர்tooltip icon

    கார்

    இந்தியாவில் அறிமுகமான 2023 டிகுவான் - இந்திய விலை எவ்வளவு தெரியுமா?
    X

    இந்தியாவில் அறிமுகமான 2023 டிகுவான் - இந்திய விலை எவ்வளவு தெரியுமா?

    • 2023 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மாடல் ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த காரிலும் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஃபோக்ஸ்வேகன் இந்தியா தனது டிகுவான் எஸ்யுவி மாடலின் 2023 வெர்ஷனை அறிமுகம் செய்தது. புதிய 2023 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மாடலின் விலை ரூ. 34 லட்சத்து 69 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது தற்போது விற்பனை செய்யப்படும் மாடலை விட ரூ. 50 ஆயிரம் அதிகம் ஆகும்.

    2023 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருப்பதோடு, புதிய RDE விதிகளுக்கு ஏற்ற மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. காரின் வெளிப்புறம் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய டிகுவான் மாடல் நைட்ஷேட் புளூ, ஆரிக்ஸ் வைட், டால்ஃபின் கிரே, டீப் பிளாக் மற்றும் ரிஃப்ளெக்ஸ் சில்வர் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    காரின் உள்புறம் டூயல் டோன் கிரே இண்டீரியர் செய்யப்பட்டு, கேபின் ஆல் பிளாக் நிறம் கொண்டிருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை வயர்லெஸ் போன் சார்ஜர், பார்கிங் அசிஸ்டண்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. ஒற்றை பட்டனை க்ளிக் செய்ததும் ஆக்டிவேட் ஆகும் பார்கிங் அசிஸ்டண்ட் மிகவும் குறுகிய பாதைகளில் காரை பார்க் செய்ய உதவுகிறது.

    இத்துடன் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், 10-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 8.0 இன்ச் டச் ஸ்கிரீன், ஹீடெட் முன்புற இருக்கைகள், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட டிரைவர் சீட், 3 ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், பவர்டு டெயில்கேட், பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய 2023 டிகுவான் மாடலில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 188 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 7 ஸ்பீடு DSG ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    Next Story
    ×