என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
'வாரிசு' இசை வெளியீட்டு விழா - விஜய் அரசியல் அறிவிப்பை வெளியிடுவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
- நடிகர் விஜய் நடித்திருக்கும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
- இதன் மூலம் விஜய்யின் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
நடிகர் விஜய் நடித்திருக்கும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காகத் தமிழ்நாடு முழுவதுமிருந்தும் ரசிகர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.
மாஸ்டர் படத்திற்குப் பிறகு நடக்கும் விழா என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியிலும் ரசிகர்களுக்கு விஜய் குட்டி கதை சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு அரசியல் தொடர்பான தனது நிலைப்பாட்டையும் மறைமுகமாக வெளிப்படுத்துவார் எனவும் பரவலாக பேசப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேசியதையடுத்து, அவரது அரசியல் நிலைப்பாட்டை இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளிப்படுத்தலாம் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். விஜய்யின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் பொங்கள் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதால் ரசிகர்களின் மோதல்கள் ஏற்படக்கூடும். இதனால் மாஸ்டர் பட நிகழ்ச்சியில் அஜித்தை பற்றி பேசியது போன்று இந்த நிகழ்ச்சியிலும் பேசி ரசிகர்களின் மோதல்களை தடுக்க விஜய் முயற்சி செய்வார் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.