என் மலர்
தோஷ பரிகாரங்கள்
எந்தக் கிழமையில் விளக்கேற்றினால் என்ன பிரச்சனை தீரும்...
- தினமும் விளக்கேற்றினால் வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறையும்.
- எந்தக் கிழமையில் விளக்கேற்றினால் எந்த மாதிரியான பலன் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.
வார நாட்களில் எந்தக் கிழமையில் விளக்கேற்றினால் எந்த மாதிரியான பலன் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.
* ஞாயிறு:- இறை சிந்தனை தோன்றும். பித்ரு தோஷம், இதயம், வயிறு, ரத்தம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய் அகலும்.
* திங்கள்:- மனவளர்ச்சி பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு அது சீராகும். கவலை, பயம், தாழ்வு மனப்பான்மை மறையும்.
*செவ்வாய்:- செவ்வாய் தோஷம், முன்கோபம், கேதுவால் ஏற்படும் பிரச்சினைகள் அகலும். பெண்களுக்கு திருமணத் தடை நீங்கும்.
* புதன்:- கல்வியில் தடை இருந்தால் அது அகலும். ஞாபக மறதி சரியாகும்.
* வியாழன்:- புத்திரதோஷம், குழந்தைகளால் ஏற்படும் பிரச்சினைகள், குடும்பத்தில் மகிழ்ச்சியின்மை போன்றவை சரியாகும். ஆண்களின் திருமணத் தடை விலகும்.
* வெள்ளி:- தம்பதிகளிடையே ஒற்றுமை குறைவு இருந்தால் அது சீராகும். கடன் பிரச்சினை, மனவேதனை நீங்கும்.
* சனி:- ஆரோக்கிய குறைபாடு, தொழில் நஷ்டம், வேலையில் நிரந்தரமின்மை போன்ற பிரச்சினைகள் அகலும். ராகுவால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.