என் மலர்
வழிபாடு
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் நாளை பட்டாபிஷேக விழா
- திருவிழா கடந்த 2-ம்தேதி தொடங்கி தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது.
- திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பு திருவிழா நடைபெற்றது.
சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலை மைப்பதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அய்யா வைகுண்டசாமி தன்னு டைய சீடர்களுக்கும், பக்தர்களுக்கும் அகிலத்தி ரட்டு அம்மானை நூல் மூலம் கூறிய கருத்துக்களை திருஏடாக வாசிப்பது வழக்கம். இந்த ஆண்டு திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 2-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது.
15-ம் நாளான நேற்று 16-ந் தேதி திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பு திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், 5 மணிக்கு திருநடை திறப்பு, காலை 6 மணிக்கு பணிவிடை, நண்பகல் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு ஆகியவை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு மலர் அலங்காரத்துடன் வைகுண்டசாமிக்கு சிறப்பு பணிவிடை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இரவு 9-மணிக்கு பக்தர்களுக்கு திருக்கல்யாண பிச்சை வழங்கப்பட்டது.11மணிக்கு திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பு துவங்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருக்கல்யாண திரு விழாவையொட்டி தலைமை பதி முன்பு மற்றும் பதியின் உள்பிரகாரங்களில், பள்ளியறையில் அலங்கார தோரணங்கள் அமைக்கபட்டிருந்தன.அய்யா வழி பக்தர்கள் அய்யா வைகுண்டசாமிக்கு பலகாரங்கள், பழங்கள், இனிப்பு வகைகள் போன்றவற்றை சுருள்களாக வைத்து வழிபட்டனர்.
சாமிதோப்பு தலை மைப்பதி குரு பால ஜனாதிபதி பாராயணவுரையாற்றினார். திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பு நிறைவடைந்தவுடன் அய்யா வைகுண்ட சாமி பச்சை பல்லாக்கில் எழுந்தருளி பதி சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
விழாவில் பள்ளியறை பணிவிடைகளை குரு பால லோகாதிபதி முன்னிலையில் குருமார்கள் பையன் கிருஷ்ண நாம மணி, பையன் செல்லவடிவு, வழக்கறிஞர் ஜனா யுகேந்த், டாக்டர் ஜனா வைகுந்த்,நேம்ரிஸ் ஆகியோர் செய்திருந்தனர். விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடை, மதியம் உச்சிப்படிப்பும், மாலை ஏடு வாசிப்பு, இரவு வாகன பவனி, அன்னதர்மம் ஆகியவை நடைபெறுகிறது. விழாவின் இறுதி நாளான நாளை 18-ந் தேதி அய்யா வைகுண்டசாமிக்கு பட்டாபிஷேக மணி மகுட சூட்டு விழா நடைபெறுகிறது.
இதனையொட்டி காலை சிறப்பு பணிவிடையும் மதியம் உச்சிப்படிப்பும் மாலை 4 மணிக்கு பட்டாபிஷேக திரு ஏடு வாசிப்பும் நடைபெறுகிறது. திரு ஏடு வாசிப்பு திருவிழாவில் நெல்லை,தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை உட்பட கேரளா,மும்பை மாநிலங்களில் இருந்தும் திரளான அய்யா வழி பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். திருவிழா நாட்களில் தலைமை பதிவளாகத்தில் காலை மதியம் இரவு நேரங்களில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.