search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நாளை ஆடிக்கிருத்திகை விழா- வடபழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு
    X

    நாளை ஆடிக்கிருத்திகை விழா- வடபழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு

    • ஆடிக்கிருத்திகையையொட்டி வடபழனி முருகன் கோவிலிலுக்கு நாளை திரளான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்கள் மேற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர்.

    சென்னை:

    வடபழனியில் உள்ள முருகன் கோவில் சிறப்பு பெற்றது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான ஆடிக்கிருத்திகை விழா நாளை 9-ந்தேதி நடைபெறுகிறது.

    நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பள்ளியெழுச்சி பூஜைகள் நடைபெறும். இதைத்தொடர்ந்து அபிஷேகம் செய்யப்படும். அது முடிந்ததும் சந்தனகாப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை, அபிஷேகம், புஷ்ப அங்கி அலங்காரம் நடக்கிறது.

    நாளை அதிகாலை, 5 மணி முதல் பக்தர்கள் தரிச னத்திற்கு அனும திக்கப்படு வார்கள் நாளை முழுவதும் நடை மூடா மல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இரவு வள்ளி, தெய்வா னையுடன் சுப்பிரமணியர் மாடவீதி புறப்பாடு நடைபெறுகிறது.

    ஆடிக்கிருத்திகையையொட்டி வடபழனி முருகன் கோவிலிலுக்கு நாளை திரளான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பக்தர்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கோவில் நான்கு முனை சந்திப்பில் டிக்கெட் கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மேற்கு, தெற்கு வாசல் வழியாக கோவிலுனுள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். வடக்கு, கிழக்கு வாசல் வழியாக பக்தர்கள் வெளியேறலாம். முதியோர்கள், கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வருவோர், மாற்றுத்திறனாளிகளுக்கு மேற்கு நுழைவாயலில் சிறப்பு வழி அமைக்கப்பட்டுள்ளது. நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்கள் மேற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர்.

    முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக, வள்ளி மண்டபம் அடுத்தபசு மடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவில் உள்பிரகாரத்தில் 3 இடங்களில் குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. டிக்கெட் கவுண்டர்களில் இருந்து உள்ளே நுழையும் வரை பந்தல், தரை விரிப்பு வசதியுடன் வரிசை அமைக்கப்படுகிறது.இரு சக்கர வாகனங்கள் கோவில் நுழைவாயிலில் உள்ள வளைவின் வலதுபுறம் உள்ள பாலம் அடியில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஆற்காடு சாலை, 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வாகனங்களில் வருபவர்கள் சற்று தொலைவில் நிறுத்தி விட்டு வருவது நெரிசலை தவிர்க்க உதவும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×