search icon
என் மலர்tooltip icon

    கர்நாடகா தேர்தல்

    தென் மாநிலங்கள் தனி நாடு தேட வேண்டியிருக்கும்
    X

    தென் மாநிலங்கள் தனி நாடு தேட வேண்டியிருக்கும்

    • காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ என்ற யாத்திரை செல்கிறார்.
    • கர்நாடகா இருந்தும் தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு முற்றிலும் அநீதி இழைத்து வருகிறது.

    பெங்களுர்:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது குறித்து கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. டி.கே. சுரேஷ் கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தென் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வட இந்தியாவுக்கு மத்திய அரசு திருப்பி விடுவதால் தென்னிந்தியாவுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. வளர்ச்சி நிதி சமமற்ற முறையில் விநியோகிக்கப்பட்டால் தென் மாநிலங்கள் தனி நாடு தேட வேண்டியிருக்கும் என்று கூறினார். அவரது இந்த கருத்துக்கு பா.ஜனதா தரப்பில் தேஜஸ்வி சூர்யா, கர்நாடக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் அசோகா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


    அவர்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ என்ற யாத்திரை செல்கிறார். ஆனால் மறுபுறம் கட்சி எம்.பி. பாரத் டோடோ என்று அழைக்கிறார். இந்திய பிரிவினைக்கு வழிவகுத்த காங்கிரசின் அதே எண்ணம் இது தான். இந்தியாவின் இறையான்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதாக உறுதி மொழி எடுத்துக் கொண்ட எம்.பி. இந்தியாவை பிளவுபடுத்த அழைப்பு விடுத்து உள்ளார் என்று தெரிவித்தனர்.

    இந்த நிலையில் டி.கே. சுரேஷின், மூத்த சகோதரரும், கர்நாடக துணை முதல்வருமான டி.கே.சிவக்குமார், வருவாயில் நியாயமான பங்கை பெறாத மக்களின் ஏமாற்றத்தையே சுரேஷ் பிரதிபலிக்கிறார். நாம் அனைவரும் இந்திய அன்னையின் குழந்தைகள், நாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்றார்.


    தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி., டி.கே. சுரேஷ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஒரு பெருமைமிக்க இந்தியன் மற்றும் பெருமைமிக்க கன்னடியன், தென்னிந்தியா மற்றும் குறிப்பாக கர்நாடகா நிதி விநியோகத்தில் அநீதியின் கொடூரத்தை எதிர் கொண்டுள்ளன. 2-வது பெரிய ஜி.எஸ்.டி. பங்களிப்பு மாநிலமாக கர்நாடகா இருந்தும் தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு முற்றிலும் அநீதி இழைத்து வருகிறது.

    இது அநீதி இல்லை என்றால் பிறகு என்ன என்று கூறியுள்ளார். நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள், எங்களின் வளர்ச்சி பணிகளுக்கு நிதி தேவை, வளர்ச்சி பணிகளுக்கும், வறட்சி நிவாரணத்திற்கும் நிதி கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக பெருமைமிக்க இந்தியர் மற்றும் காங்கிரஸ்காரர் என்று டி.கே. சுரேஷ் அதில் பதிவிட்டுள்ளார். மேலும் கர்நாடகாவிற்கு அநீதிக்கு எதிராக நான் தொடர்ந்து குரல் எழுப்புவேன், எதுவாக இருந்தாலும் ஜெய்ஹிந்த், ஜெய் கர்நாடகா என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×