என் மலர்


3
3 திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2012-ல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த திரைப்படம் ‘3’. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன், பிரபு, பானுப்பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியான நேரத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.

இந்நிலையில், தனுஷின் அடுத்த படமான கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு முன்னோட்டமாக ‘3’ திரைப்படம் சென்னையில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது. இதையடுத்து சென்னை, கோவை, மதுரை என பல பகுதிகளில் இப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

பல வருடங்களுக்கு பிறகும் இந்த படத்திற்கு கிடைத்த ஆதரவை பார்த்து மகிழ்ச்சியடைந்த நடிகர் தனுஷ், “3 படத்தின் ரீ ரிலீஸ் ஆதரவைப் பார்த்து எமோஷனலாக உள்ளது. ரசிகர்களுக்கு மில்லியன் நன்றிகள்” என பதிவிட்டிருந்தார்.








