என் மலர்


35 - சின்ன விஷயம் இல்லே
கணிதத்தை பற்றியும் வாழ்க்கை குறித்தும் கேள்விகள் நிறைந்த சிறுவனின் வாழ்க்கை கதை
கதைக்களம்
10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த கதாநாயகியான நிவேதா தாமஸ் விஷ்வதேவை திருமணம் செய்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. எல்லாம் பெற்றோர்களை போலவே தங்கள் குழந்தைகளையும் நன்றாக படிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் இவரின் மூத்த மகன் அருண் தேவ் படிப்பு சுமாராகதான் வருகிறது. கணக்கு பாடம் அருண் தேவ் படிப்பதற்கு கஷ்டப்படுகிறான்.
இதற்கிடையே அருண் தேவ் படிக்கும் பள்ளிக் கூடத்தில் புது கணக்கு ஆசிரியராக வருகிறார் பிரியதர்ஷி. இவர் மிகவும் ஸ்டிரிக்டான ஆசிரியராக இருக்கிறார். மாணவர்களை அவர்கள் எடுக்கும் மதிப்பெண்களை வைத்து அழைக்கிறார். அருணின் மதிப்பெண் 0 என்பதால். அவனை பூஜ்ஜியம் என அழைக்கிறார்.அவரது பள்ளி படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிகளை மேற்கொள்கிறார்.
மகனின் நிலையை கண்டு வருத்தமடையும் நிவேதா தாமஸ் மகனின் கணித சந்தேகத்தை தீரித்து வைத்து அவனை முன்னேற்றலாம் என முயற்சி செய்கிறார். இந்த பயணத்தில் அவர் வெற்றிப் பெற்றாரா? மகனுக்காக என்னென்ன முயற்சிகளை எல்லாம் மேற்கொள்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
அருணின் தாய் கதாப்பாத்திரத்தில் நிவேதா தாமஸ் நடித்துள்ளார். நிவேதா தாமஸ், ஒட்டு மொத்த கதையையும் நகர்த்தி செல்வதோடு, மனைவியாகவும், தாயாகவும் தனது கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்திருக்கும் நிவேதா தாமஸ், சிறு சிறு முக பாவனைகளோடு மூலம் கவனம் ஈர்க்கிறார்.
சிறுவனான அருண் தேவ் கணிதம் சந்தேகத்தை கேட்கும் காட்சிகள், அப்பாவி தனமான நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் மனதை கவர்ந்துள்ளார்.
கணித ஆசிரியராக நடித்து இருக்கும் பிரிய தர்ஷி அவரது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இயக்கம்
கணித ஆசிரியர்களுக்கு பாடம் எடுத்திருக்கும் வகையில் படத்தை இயக்கியிருக்கும் நந்த கிஷோர் , படம் முழுவதும் வசனங்கள் அதிகமாக இருந்தாலும் எந்த இடத்திலும் தொய்வில்லாமல் திரைக்கதையை நகர்த்தி படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.
குறிப்பாக பள்ளி காட்சிகள் அனைத்தும் புதிதாக இருப்பதோடு, அதில் என்ன பேச வேண்டுமோ அதை மட்டுமே பேசி, தான் சொல்ல வந்த கருத்தை மக்கள் மனதில் ஆழமாக பதியச் செய்து விடுகிறார். இரண்டாம் பாதியில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம்.
இசை
விவேக் சாகரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மியின் கேமரா படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
தயாரிப்பு
Suresh Productions, S Originals, Waltair Productions ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.








