search icon
என் மலர்tooltip icon
    < Back
    Aghori
    Aghori

    அகோரி

    இயக்குனர்: டி.எஸ்.ராஜ்குமார்
    எடிட்டர்:ராஜ்குமார்
    ஒளிப்பதிவாளர்:வசந்த்
    வெளியீட்டு தேதி:2023-12-15
    Points:563

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை180170
    Point252311
    கரு

    பேய் வீட்டில் சிக்கியவர்கள் குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    திரைப்படம்இயக்கும் முயற்சியில் இருக்கிறார் நாயகன்  சித்து சித். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கதை எழுதுவதற்காக பெரிய பழங்காலத்து வீட்டில் தங்குகிறார். அங்கு சில அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதோடு, அங்கிருக்கும் அமானுஷ்யம் மூலம் அவர்களுக்கு ஒரு காட்சி பற்றிய சுருக்கம் எழுதப்பட்ட பேப்பர் கிடைக்கிறது.

    அதில் இருப்பது போல் நடக்கவில்லை என்றாலும், அங்கிருந்து வெளியே செல்ல நினைத்தாலும், அனைவரும் இறந்துவிடுவார்கள் என்று, அந்த பேப்பரில் எழுதப்பட்டிருக்கிறது. இதனால், அவ்வப்போது அவர்கள் கையில் கிடைக்கும் அந்த பேப்பரில் உள்ள காட்சிகளுக்கு ஏற்றவாறு சித்து மற்றும் அவரது நண்பர்கள் நடந்துக்கொள்கிறார்கள்.

    ஒரு கட்டத்தில் சித்துவின் காதலி ஸ்ருதி ராமகிருஷ்ணனும் அந்த வீட்டுக்குள் சிக்கிக் கொள்கிறார். இந்த நிலையில், நாயகன் சித்து சித் மற்றும் அவரது காதலி ஸ்ருதி ராமகிருஷ்ணன் இருவரையும் கொலை செய்தால் மட்டுமே மற்றவர்கள் அங்கிருந்து தப்பிக்க முடியும், என்று எழுதப்பட்ட பேப்பர் அவர்களுக்கு கிடைக்கிறது.

    இறுதியில் வீட்டுக்குள் சிக்கியவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? பேப்பரில் எழுதி அனுப்புவது யார்? எதற்காக அப்படி செய்கிறார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    தொலைக்காட்சித்தொடர்களில் நடித்து பிரபலமான சித்து சித், இப்படத்தின் மூலம் வெள்ளித்திரை நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். பயம், கோபம், இயலாமை போன்ற உணர்வுகளை மிக எதார்த்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

    நாயகியாக நடித்திருக்கும் ஸ்ருதி ராமகிருஷ்ணன், காதலனை தேடி வந்து பேய் இடம் சிக்கிக்கொண்டு சிதைந்து போகிறார். தனக்கான வேலை குறைவு என்றாலும் அதை குறையில்லாமல் செய்திருக்கிறார். நண்பர்கள் அனைவரும் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

    அகோரியாக நடித்திருக்கும் சாயாஜி ஷிண்டேவின் அனுபவமான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    இயக்கம்

    இயக்குனர்டி.எஸ்.ராஜ்குமார், திகில் கதையை பயமுறுத்தும் வகையில் மட்டும் இன்றி பொழுதுபோக்காகவும் கொடுக்க முயற்சி செய்து இருக்கிறார்.

    படத்தின் கதை ஆரம்பத்தில் தெரிந்து விட்டாலும், பேய் வீட்டுக்குள் சிக்கியவர்கள் தப்பிப்பார்களா? என்று இறுதி வரை சுவாரஸ்யம் கொடுக்க நினைத்து இருக்கிறார்.

    இசை

    இசையமைப்பாளர் 4 மியூசிக்கின் பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டமாக பயணித்திருக்கிறது.

    ஒளிப்பதிவு 

    ஒளிப்பதிவாளர் ஏ.வி.வசந்த் கிராபிக்ஸ் காட்சிகளுக்கும், நிஜ காட்சிகளுக்கும் வித்தியாசம் தெரியாதவாறு காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.

    படத்தொகுப்பு 

    ராஜ்குமார் படத்தொகுப்பு சிறப்பு.

    புரொடக்ஷன் 

    மோஷன் பிலிம் பிக்சர் ஐ.என்.சி. நிறுவனம் அகோரி திரைப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×