என் மலர்


அநீதி
தேவையற்ற சந்தேகத்தால் ஒரு மனிதனின் மனநிலை எப்படி மாறுகிறது என்பது குறித்த கதை.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அர்ஜுன் தாஸ் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்துக் கொண்டு சென்னையில் தன் நண்பர்களுடன் வசித்து வருகிறார். அடிக்கடி கோபம் வரும் சுபாவம் கொண்ட இவர் அந்த கோபத்தை வெளிக்காட்டாமல் அந்த நபரைக் கொல்வது போன்றும் அடிப்பது போன்றும் தன்னுள்ளே நினைத்து அடக்கிக் கொள்கிறார்.


இப்படி இவர் காதல் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் செல்கிறது. ஒரு கட்டத்தில் துஷாரா விஜயன் கவனித்து வரும் பாட்டி இறந்துவிடுகிறார். துஷாரா விஜயன் மட்டும்தான் அந்த வீட்டில் இருந்து அவரை கவனித்து வருவதால் எல்லோருக்கும் இவர் மீது சந்தேகம் திரும்புகிறது.


கதாநாயகனான அர்ஜுன் தாஸ் தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். அவரது குரலும், தோற்றமும் கதாபாத்திரத்திற்கு நன்றாக பொருந்தியுள்ளது. எமோஷன், கோபம் என அனைத்திலும் தேவையான நடிப்பை கொடுத்து கவர்ந்திருக்கிறார். அப்பாவாக வரும் காளிவெங்கட் சிறிது நேரம் திரையில் தோன்றினாலும் மனதில் நிற்கும் அளவிற்கு நடித்துள்ளார். அவரின் ஒவ்வொரு செயலும் ஒவ்வொருவரின் அப்பாவையும் நியாபகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தன் தேர்ந்த நடிப்பால் பாராட்டை பெறுகிறார்.

கதாநாயகியான துஷாரா விஜயன் தனக்கான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். பாட்டியின் மகளாக வரும் வனிதா விஜயகுமார் திமிரான நடிப்பால் அசத்தியுள்ளார்.


ஜி.வி.பிரகாஷ் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ஏ.எம்.எட்வின் சாகே ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
மொத்தத்தில் அநீதி - பிரகாசம்









