search icon
என் மலர்tooltip icon
    < Back
    Ayalaan
    Ayalaan

    அயலான்

    இயக்குனர்: ரவிக்குமார் ஆர்
    எடிட்டர்:ஆண்டனி எல் ரூபன்
    ஒளிப்பதிவாளர்:நீரவ் ஷா
    இசை:ஏஆர் ரகுமான்
    வெளியீட்டு தேதி:2024-01-12
    Points:18632

    ட்ரெண்ட்

    வாரம்12345
    தரவரிசை2014131014
    Point3360734648022409715
    கரு

    ஏலியனுக்கு உதவி செய்யும் இளைஞன் குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    பூம்பாறை கிராமத்தில் வசித்து வரும் சிவகார்த்திகேயன் புழு, பூச்சிகளுக்கு கூட தீங்கு நினைக்காத மனிதராக இருக்கிறார். இவரின் வயலை வெட்டுக்கிளிகள் முழுவதுமாக சேதமாக்கிவிடுகிறது. இதனால் வாழ்வாதாரம் தேடி சிவகார்த்திகேயன் சென்னை வந்து யோகிபாபு மற்றும் கருணாகரனுடன் இணைந்து வேலை செய்கிறார்.

    இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் வேற்று கிரகத்தில் இருந்து விழுந்த கல்லை வைத்து வில்லன் பூமியில் அதிக துளையிட்டு வாயு ஒன்றை எடுக்க முயற்சிக்கிறார். இதனை அறிந்த ஏலியன் அந்த கல்லை மீட்க வில்லன் இருக்கும் இடத்திற்கு செல்கிறது. அப்போது கல்லை மீட்டு வெளியே வரும் பொழுது அடிப்பட்டு மயங்கிய நிலையில் சிவகார்த்திகேயன் குழுவிடம் மாட்டிக் கொள்கிறது.

    ஒரு கட்டத்தில் ஏலியனின் பிரச்சனையை தெரிந்து கொண்ட சிவகார்த்திகேயன் அதற்கு உதவி செய்ய நினைக்கிறார்.

    இறுதியில் சிவகார்த்திகேயன் இதனால் என்ன பிரச்சனைகளை சந்தித்தார்? ஏலியன் கல்லை எடுத்துக் கொண்டு தன் கிரகத்திற்கு சென்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    சிவகார்த்திகேயன் நடிப்பு மட்டுமல்லாமல் ஆக்‌ஷனிலும் கலக்கியிருக்கிறார். ஏலியனுடன் சேர்ந்து சண்டையிடும் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். ரகுல் ப்ரீத் சிங் அழகாக வந்து கவர்ந்துள்ளார்.

    யோகிபாபு, கருணாகரன் கூட்டணியில் காமெடியும் கைக்கொடுத்துள்ளது. ஏலியனுக்கு சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். இவரின் குரல் குழந்தைகளை கவரும் விதமாக அமைந்துள்ளது.

    இயக்கம்

    அயலான் படத்தின் முதல் பாதி சுமாராக இருந்தாலும் இரண்டாம் பாதியில் அதிரடி காட்டியுள்ளார் இயக்குனர் ரவிகுமார். கிராபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. வெட்டுகிளிகள் வரும் காட்சிகள், ஏலியன் வரும் காட்சிகள் என படம் முழுவதும் கிராபிக்ஸால் மிரட்டியுள்ளார்.

    இசை

    ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். பின்னணியில் இசையில் ஸ்கோர் செய்துள்ளார்.

    ஒளிப்பதிவு

    நீரவ் ஷா ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளித்துள்ளது.

    படத்தொகுப்பு

    ரூபன் படத்தொகுப்பு ரசிக்க வைத்துள்ளது.

    காஸ்டியூம்

    பல்லவி சிங் மற்றும் நீரஜா கோனா சிறப்பாக காஸ்டியூம் டிசைன் செய்துள்ளனர்.

    புரொடக்‌ஷன்

    கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் ’அயலான்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    2024-01-24 12:01:43.0
    Malar

    Nice

    2024-01-24 08:30:58.0
    Sathya

    Good

    2024-01-24 06:48:06.0
    Ishani Ramya

    Super

    2024-01-23 10:03:28.0
    Silba

    Good

    2024-01-15 18:15:29.0
    SWAMINATHAN THIYAGARAJAN

    2024-01-15 14:18:12.0
    Panduorem

    2024-01-12 04:12:01.0
    Thomas

    ×