என் மலர்
பர்த்மார்க்
- 0
- 0
- 0
வாரம் | 1 | 2 |
---|---|---|
தரவரிசை | 290 | 257 |
Point | 88 | 118 |
மனைவியின் இயற்கை பிரசவத்திற்கு போராடும் ராணுவ வீரரின் கதை.
கதைக்களம்
ராணுவ வீரர் சபீர் கார்கில் போரில் இருந்து வீடு திரும்புகிறார். அப்போது மனைவி மிர்ணா கர்ப்பமாக இருக்கிறார். இவருக்கு இயற்கை முறையில் பிரசவம் பார்க்க குழந்தைபேறு கிராமத்திற்கு தனது மனைவியை அழைத்துச் செல்கிறார்.
ஒரு கட்டத்தில், மிர்ணா வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நான் தான் அப்பாவா... என்ற சந்தேகம் அவருக்கு வருகிறது.
இறுதியில் தனது மனைவியின் பிரசவத்தை சுக பிரசவமாக மாற்றினாரா? மனைவி மீது உள்ள சந்தேகம் தீர்ந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சபீர் ராணுவ வீரர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். ஒரு போருக்கு சென்று திரும்பியவரின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை தனது நடிப்பால் வெளிப்படுத்தியுள்ளார். ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள மிர்ணா படம் முழுக்க 9 மாத கர்ப்பிணியாக நடித்துள்ளார். ஒரு நிஜமான கர்ப்பிணி பெண் நடப்பதற்கும், உட்காருவதற்கும் எவ்வளவு சிரமப்படுகிறாரோ அதே சிரமத்தை தனது நடிப்பால் வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் மொத்தமே ஐந்து முதல் ஆறு கதாபாத்திரங்கள் மட்டுமே உள்ளனர். அவர்கள் அனைவரும் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
வித்தியாசமான கதையை கொண்டு படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன். ஒரு ஆங்கில படம் அளவிற்கு மேக்கிங்கில் கவனம் செலுத்தி இருக்கிறார். ஆனால், திரைக்கதை தெளிவு இல்லாமல் நகர்வதால் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், இயக்குனரின் வித்தியாசமான முயற்சி பெரிய பாராட்டுக்கள். போரில் பல கொலைகளை செய்து விட்டு திரும்பும் ஒரு மனிதனின் குற்ற உணர்ச்சிகள் அவனுக்குள் என்னவெல்லாம் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை சொல்ல முயற்சி செய்து இருக்கிறார்.
இசை
விஷால் சந்திரசேகரனின் இசை மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம்.
ஒளிப்பதிவு
உதய் தங்கவேலுவின் ஒளிப்பதிவில் அந்த மலை கிராமத்தை நன்றாகவே காட்டியுள்ளனர்.