என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பிளடி பெக்கர்
- 0
- 0
- 1
வாரம் | 1 | 2 |
---|---|---|
தரவரிசை | 48 | 96 |
Point | 1892 | 894 |
ஒரு பிச்சைக்காரன் பணக்கார வீட்டில் சிக்கிக்கொள்ளும் கதை
கதைக்களம்
கவின் ஒரு பிச்சைக்காரனாக இருக்கிறார். ஒரு நாள் பார்வையற்றவனாக, ஒரு நாள் கால் இல்லாத ஊனமுற்றோராக என நடித்து பிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் சமூகத்தில் பெரிய அந்தஸ்த்தும் செல்வாக்கும் உள்ள ஒரு நபர் இறந்துவிட அவரின் நினைவாக ஆதரவற்றவர்களுக்கு விருந்தளிக்க ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்கின்றனர். அப்பொழுது அந்த ஆதரவற்ற ஒருவராக கவின் அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள அந்த ஆடம்பர பங்களாவில் நுழைகிறார். நீண்ட நாளாக கவினுக்கு அந்த மாளிகையில் நுழைய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு அந்த மாளிகையில் என்ன இருக்கிறது என பார்க்கும் ஆர்வத்தில் உள்ளே நுழைகிறார். மாளிகையில் நுழைந்தப்பின் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் கவினின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. அப்படி என்ன சிக்கல் இருக்கிறது அந்த மாளிகையில் ? கவின் உயிர் தப்பித்து மாளிகையில் இருந்து வெளிவந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கவின் பிச்சைக்காரன் கதாப்பாத்திரத்திற்கு பொருந்தும் விதமாக தனது நடிப்பில் மிரட்டியுள்ளார். கவின் மற்றும் ரெடின் கிங்ஸ்லி இருவருக்கும் இடையே உள்ள நகைச்சுவை காட்சிகள் நிறைய இடத்தில் வொர்க் அவுட் ஆகியுள்ளது. மாருதி பிரகாஷ்ராஜ், சுனில், கார்த்திக், அக்ஷயா ஹரிஹரன் மற்றும் நடித்த நடிகர்கள் அனைவரும் அவர்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
இயக்கம்
ஒரு பிச்சைக்காரன் பணக்கார வீட்டில் சிக்கிக்கொண்டால் என்ன ஆகும் என கற்பனை கதையை நகைச்சுவை தன்மையுடன் இயக்கியுள்ளார் இயக்குனர் சிவபாலன் முத்துகுமார். திரைப்படம் தொடங்கி 20 நிமிடங்களிலே மாளிகைக்குள் கவின் செல்ல பின் திரைப்படம் இறுதிவரை கதை மாளிகைக்குள்ளே நகர்கிறது இது பார்வையாளர்களுக்கு சோர்வை தருகிறது. நகைச்சுவை மற்றும் எமோஷனல் காட்சிகள் படத்தில் பல இடங்களில் சிறப்பாக அமைந்துள்ளது. இரண்டாம் பாதியில் நீளத்தை சற்று குறைத்து இருந்தால் படம் கூடுதல் ரசிக்க பட்டிருக்கும்.
இசை
ஜென் மார்டின் இசை படத்திற்கு கூடுதல் பலம். படத்தில் இடம்பெற்றுள்ள பொன்மாயமே என்ற பாடல் மிகவும் எமோஷனலாக அமைந்துள்ளது.
ஒளிப்பதிவு
படத்தின் பெரும்பாலான பகுதி மாளிகைக்குள் நடக்கிறது இதை மிகவும் சுவாரத்தியுடனும் நேர்த்தியாகவும் கையாண்டுள்ளார் ஒளிப்பதிவாளர் சுஜித் சரங்.
தயாரிப்பு
ஃபிலாமெண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்