என் மலர்


செவ்வாய்கிழமை
ஆதரவு இல்லாமல் தவிக்கும் ஒரு பெண்ணின் கதை.
கதைக்களம்
ஒரு ஊரில் திருமண உறவை தாண்டி தவறான உறவில் இருப்பவர்களின் பெயர்கள் ஒரு சுவரில் செவ்வாய்கிழமை தோறும் எழுதப்படுகிறது. சுவரில் பெயர் எழுதப்பட்டவர்கள் மர்மமான முறையில் மரணமடைகிறார்கள். இதனால் ஊர் மக்கள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது. இந்த மரணங்களுக்கு யார் காரணம் என்று போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.
இறுதியில் இந்த மரணம் எப்படி நடந்தது? இதற்கு காரணம் யார் என்பதை கண்டுபிடித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
ஆசிரியரின் விருப்பத்துக்கு உடன்படுகிற காம உணர்ச்சி, ஏமாற்றத்தில் ஏற்படும் விரக்தி என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் நாயகி பாயல் ராஜ்புத். கவர்ச்சிக்கு கவர்ச்சி, காதலுக்கு காதல், நடிப்புக்கு நடிப்பு என மிரட்டியுள்ளார்.
ஆசிரியராக வந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அஜ்மல் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்துள்ளார். பாட்டியாக வரும் ஸ்ரீலேகா நடிப்பு மெய்சிலிர்க வைக்கிறது. அஜய் கோஷ் காமெடி படத்தின் கதையோட்டத்திற்கு கூடுதல் பலம்.
இயக்கம்
இதுதான் முடிவு என்று நாம் சில காட்சிகளை நினைக்கும் போது சில திருப்புமுனைகளை கொடுத்து காட்சியை சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் அஜய் பூபதி.
இசை
காந்தாரா படத்திற்கு இசையமைத்த அஜீனிஸ் லோக்நாத், இசை மூலம் மிரட்டி இருக்கிறார். பல இடங்களில் காந்தாரா சாயல் தெரிந்தாலும் படத்துடன் ஒன்ற வைப்பதில் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
ஒளிப்பதிவு
தசரத்தி சிவேந்திரா ஒளிப்பதிவு அருமை.
படத்தொகுப்பு
மாதவ் குமார் படத்தொகுப்பு கவர்கிறது.
புரொடக்ஷன்
முத்ரா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் 'செவ்வாய்கிழமை’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.









