என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தண்டுபாளையம்
- 0
- 0
- 1
வாரம் | 1 | 2 | 3 | 4 |
---|---|---|---|---|
தரவரிசை | 261 | 209 | 133 | 80 |
Point | 96 | 169 | 28 | 36 |
கொலை, கொள்ளை செய்யும் கும்பலின் பற்றிய கதை
கதைக்களம்
சுமன் ரங்கநாதன் எட்டு பேர் கொண்ட கும்பலை நடத்தும் ஒரு பயங்கரமான குற்றவாளி. மக்களை சித்திரவதை செய்து, அவர்களின் சொந்த நோக்கங்களுக்காக பணம், ஆபரணங்கள் மற்றும் பிற விலைமதிப்பற்ற பொருட்களைப் பறிப்பது மட்டுமே அவளுடைய ஒரே குறிக்கோள். எனவே, அவர்களை பிடிக்க, டைகர் வெங்கட் என்ற சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். டைகர் வெங்கட் இந்த கும்பலை எவ்வாறு பிடித்தார்? அவர் பட்ட இன்னல்கள் என்ன? இந்த கும்பலின் கொலை, கொள்ளையிற்கு பின் யார் இருக்கிறார்? ஏன் இதை இவர்கள் செய்கிறார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
சுமன் ரங்கநாதன் சிறப்பாக நடித்துள்ளார், கொடுத்த கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து மிரட்டியுள்ளார். டயலாக்குகளை அந்த ஊர் ஸ்லாங்கில் அழகாக பேசியுள்ளார். வனிதா விஜயகுமார் மற்றும் சோனியா அகர்வால் சில காட்சிகளில் வந்தாலும் அவர்களது பங்கை சிறப்பாக செய்து கவனம் ஈர்த்துள்ளனர். கும்பலின் உறுப்பினர்கள் கொடுத்த வேலையை செய்துள்ளனர். போலீஸ் அதிகாரியாக வரும் டைகர் வெங்கட் நல்ல நடிப்பை வழங்கியுள்ளார்.
இயக்கம்
கர்னாடக்காவில் இருந்த அச்சுறுத்தும் கும்பலை மையமாக வைத்து உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இயக்குனர் டைகர் வெங்கட் இயக்கியுள்ளார். படத்தில் காட்டப்படும் குற்றங்கள் மீண்டும் மீண்டும் நிகழ கூடியதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பார்வையாளார்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. காட்சிகள் ஒன்றுக்கும் ஒன்றுக்கும் பிணைப்பு இல்லை. படத்தின் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும், படத்தின் காட்டப்படும் கற்பழிப்பு காட்சிகளும் மற்றும் கொள்ளை சம்பவங்கள் பார்வையாளர்களுக்கு முகசுழிப்பை ஏற்படுத்துகிறது.
ஒளிப்பதிவு
கிராமப்புற காட்சிகளை மிக அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளார் இளங்கோவன்.
இசை
ஜித்தின் கே ரோஷனின் பின்னணி இசை கேட்கும் ரகம்.
தயாரிப்பு
வெங்கட் மூவீஸ் நிறுவனம் தண்டுபாளையம் திரைப்படத்தை தயாரித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்