search icon
என் மலர்tooltip icon
    < Back
    Deadpool & Wolverine
    Deadpool & Wolverine

    டெட்பூல் & வோல்வரின்

    இயக்குனர்: ஷான் லெவி
    எடிட்டர்:ஷேன் ரீட்
    ஒளிப்பதிவாளர்:ஜார்ஜ் ரிச்மண்ட்
    இசை:ராப் சைமன்சன்
    வெளியீட்டு தேதி:2024-07-26
    Points:7737

    ட்ரெண்ட்

    வாரம்123456789
    தரவரிசை493836304740321714
    Point188533941664652793112155
    கரு

    பாரடாக்ஸிடம் இருந்து தனது உலகை காப்பாற்றும் டெட்பூலின் கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    டெட்பூல் படத்தின் முந்தைய இரண்டு பாகங்களின் தொடர்ச்சியாகவே, டெட்பூல் & வோல்வரின் திரைப்படம் வந்துள்ளது. லோகி சீரிஸில் வந்த டைம் வேரியண்ட் அதாரிட்டியை (TVA) சேர்ந்த, பாரடாக்ஸ் எனும் நபர் ஒட்டுமொத்த TVA அமைப்பையும் கைப்பற்ற நினைக்கிறார். அதேநேரம், டெட்பூல் உலகத்தைச் சேர்ந்த வோல்வரின் கதாபாத்திரம் (Anchor Being) இறந்ததால், அந்த ஒட்டுமொத்த உலகமும் அழிய இருக்கிறது.

    இதனை அறிந்த பாரடாக்ஸ், டெட்பூலின் தேவையை கருதி அவரை காப்பாற்றி, வேறு உலகிற்கு அனுப்ப முயல்கிறார். அப்போது, தனது உலகம் அழியவிருப்பதை அறிந்த டெட்பூல், எப்படி பாரடாக்ஸிடம் இருந்து தப்பிச் சென்று தனது உலகை காப்பாற்றினார் என்பது தான் மீதிக்கதை.

    நடிகர்கள்

    டெட்பூலாக நடித்து இருக்கும் ரியான் ரெனால்ட்ஸ் அவருக்கென தனித்துவ நடிப்பாலும், உடல் பாவனையை வைத்து நடிப்பில் மிரட்டியுள்ளார். அவரது எதார்த்த நடிப்பு பார்வையாளர்களிடம் கைத்தட்டலை பெறுகிறது.

    இவருக்கு சற்றே குறைவில்லாமல் ஹூஜ் ஜாக்மென் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வோல்வரினின் ஆக்‌ஷன் காட்சிகள் தாறுமாறாக இருக்கிறது. மொத்த திரைப்படத்தையும் இந்த இரு கதாப்பாத்திரங்கள் தோளில் தூக்கி சுமந்துள்ளனர்.

    இயக்கம்

    ஷான் லெவி மிக சிறப்பான படைப்பை இயக்கியுள்ளார். நகைச்சுவை மற்றும் ஆக்‌ஷனை கலந்து பார்வையாளர்களுக்கு விருந்தளித்துள்ளார். படத்தின் ஆங்காங்கே வரும் கேமியோ கதாப்பாத்திரங்கள் திரையரங்குகளில் விசில் பறக்கிறது. வில்லி கதாப்பாத்திரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. படத்தின்  கிளைமாக்ஸ் காட்சியில் மிரட்டியுள்ளார். மொத்த திரையரங்கமே கொண்டாடும்படி காட்சிகள் அமைத்து இப்படத்தை இயக்கிய ஷான் லெவிக்கு மிகப்பெரிய பாராட்டுகள்.

    டப்பிங்

    தமிழ் டப்பிங் மிக அழகாக நகைச்சுவையாக மேற்கொண்டுள்ளனர். திரையரங்கில் அனைத்து காட்சிகளிலும் நகைச்சுவை வொர்க் அவுட் ஆகியுள்ளது. நீங்கள் மார்வெல் மற்றும் எக்ஸ்-மேன் படங்களை ஆரம்பம் முதலே பார்த்து வருபவராக இருந்தால், டெட்பூல் & வோல்வரின் திரைப்படம் உங்களுக்கு ஒரு சிறந்த விருந்தாக இருக்கும். நிச்சயம் திரையரங்குகளில் பார்க்க தவறாதீர்கள்.

    ஒளிப்பதிவு

    ஜார்ஜ் ரிச்மண்டின் ஒளிப்பதிவு படத்தின் கதையோட்டத்திற்கு பெரிதும் உதவியுள்ளது.

    இசை

    ராப் சைமன்சின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.

    தயாரிப்பு

    மார்வல் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×