search icon
என் மலர்tooltip icon
    < Back
    Despicable Me 4
    Despicable Me 4

    டெஸ்பிகபிள் மீ 4

    இயக்குனர்: கிறிஸ் ரெனாட்
    எடிட்டர்:டிஃபானி ஹில்குர்ட்ஸ்
    இசை:ஹெய்ட்டோர் பரெய்ரா
    வெளியீட்டு தேதி:2024-07-05
    Points:1159

    ட்ரெண்ட்

    வாரம்1234
    தரவரிசை13311713990
    Point4446702322
    கரு

    க்ரூ மேக்ஸ்மியை பழிவாங்கினாரா இல்லையா என்பதே கதை.

    விமர்சனம்

    கதைக்களம்

    க்ரூ அவரது வில்லத்தனத்தை எல்லாம் மூட்டைக்கட்டிவிட்டு அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து மற்றும் க்ரு சீக்ரெட் டிடெக்டிவாக பணியாற்றி வருகிறார். அவர் பெரிய வில்லனான மேக்ஸிமியை தேடி வருகிறார்.

    இந்த சூழலில் க்ரூ தன் பள்ளி அலுமினி மீட்டிங்கில் கலந்துக் கொள்ளும் போது அவரது நண்பனான மேக்ஸிமி சிறந்த வில்லனுக்காக விருதை வெல்ல, இது தான் சரியான வாய்ப்பு என க்ரூ அவரை கைது செய்கிறார்.

    அதனால் மிகவும் கோபம் அடைந்த மேக்ஸிமி க்ரூவை பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்ய, சிறையிலிருந்து தப்பிக்கிறார். இந்த செய்தியை அறிந்துக்கொண்ட க்ரூ தன் குடும்பத்துடன் தங்களின் அடையாளங்களை மாற்றிக்கொண்டு தலைமறைவாகிறார்.

    பிறகு மேக்ஸிமி, க்ரூவை கண்டிப்பிடிக்க, க்ரூ எப்படி தப்பித்தார்? அதற்கடுத்து என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

    டப்பிங்

    படத்திற்கு சிறப்பான தமிழ் டப்பிங்கை மேற்கொண்டுள்ளனர். நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் வொர்க் அவுட் ஆகியுள்ளது.

    இயக்கம்

    வழக்கம் போல் சிறந்த பாகத்தை இயக்கியுள்ளார் கிறிஸ் ரெனாட். நகைச்சுவை காட்சிகளை மிகவும் அழகாக இயக்கியுள்ளார். க்ரூ தன் குடும்பத்துடன் செய்யும் குறும்புத்தனமான காட்சிகள் பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறது.இதெல்லாம் விட சூப்பர் பவருடன் வரும் மினியன்ஸ் செய்யும் அட்டகாசம் ஒட்டு மொத்த சூப்பர் ஹீரோக்களையும் நிக்க வைத்து கலாய்த்துள்ளனர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம், சப்பென முடிந்தது படத்தின் குறை.

    அனிமேஷன்

    அனிமேஷன் காட்சிகளை சிறப்பாக மேற்கொண்டுள்ளார் மைக்கல்.

    இசை

    ஹெய்ட்டர் பெரெய்ரா வின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.

    தயாரிப்பு

    யூனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×