என் மலர்tooltip icon
    < Back
    Devil
    Devil

    டெவில்

    இயக்குனர்: ஆதித்யா
    எடிட்டர்:எஸ். இளையராஜா
    இசை:மிஷ்கின்
    வெளியீட்டு தேதி:2024-02-02
    Points:2102

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை152168
    Point9401162
    கரு

    கணவனால் மனமுடைந்த மனைவி குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    நாயகன் விதார்த்தும், நாயகி பூர்ணாவும் திருமணம் செய்து கொள்கிறார்கள். வக்கீலாக இருக்கும் வித்தார்த் தன்னுடன் வேலை பார்க்கும் சுபஶ்ரீயுடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்கிறார். இது ஒரு கட்டத்தில் பூர்ணாவிற்கு தெரிய வருகிறது. மன வருத்தத்தில் விதார்த்துடன் சண்டை போட்டு காரில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக திரிகன் பைக் மீது மோதி விபத்து ஏற்படுகிறது.

    இதில் திரிகனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. ஆதரவற்று இருக்கும் திரிகனுக்கு வலி மற்றும் துன்பத்தை ஏற்படுத்திய பூர்ணாவுக்கு இது குற்ற உணர்வாக மாறுகிறது. இதனால் திரிகனை அடிக்கடி சந்திக்கிறார். இவர்களுக்குள் காதல் ஏற்படுகிறது. இந்நிலையில் நாயகன் விதார்த் மனம் திருந்தி பூர்ணாவை தேடி வருகிறார்.

    இறுதியில் நாயகி பூர்ணா கணவர் விதார்த்துடன் சேர்ந்து வாழ்ந்தாரா? திரிகனுடன் ஏற்பட்ட காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    நாயகன் விதார்த், துரோகம் செய்யும் கணவன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். பூர்ணாவிடம் நல்லவன் போல் இருப்பது, சுபஶ்ரீயுடன் உல்லாசமாக இருப்பது, துரோகத்தை உணர்ந்து வருந்துவது என நடிப்பில் பளிச்சிடுகிறார். நாயகி பூர்ணா யாரும் எதிர்பார்த்திடாத அளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். கணவனை நினைத்து வருந்தும் காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார்.

    திரிகன் அழகாக வந்து ஸ்மார்ட்டாக நடித்து இருக்கிறார். மற்றோரு நாயகி சுபஶ்ரீ கவர்ச்சியில் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். இருவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    காதல், துரோகம், கள்ளத் தொடர்பு, பாசம் என படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஆதித்யா. முதல் பாதி காதல் ரொமான்ஸ் என திரைக்கதை நகர்கிறது. இரண்டாம் பாதி சென்டிமெண்ட் திரில்லர் என திரைக்கதையை நகர்த்திருக்கிறார். திரையில் நான்கு கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து முழு கதையையும் நகர்த்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    இசை

    இசையை கற்று ஒரு படத்திற்கு இசையமைப்பாளராக மாறிய மிஷ்கினுக்கு பெரிய கைத்தட்டல். படத்தின் பாடல்கள் அனைத்தும் மென்மையாக இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.

    ஒளிப்பதிவு

    கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது.

    படத்தொகுப்பு

    இளையராஜா படத்தொகுப்பு அருமை.

    காஸ்டியூம்

    ஷைமா அஸ்லாம் காஸ்டியூம் டிசைனில் கதாபாத்திரங்கள் பளிச்சிடுகின்றனர்.

    புரொடக்‌ஷன்

    மாருதி பிலிம்ஸ் மற்றும் எச் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து ‘டெவில்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×