என் மலர்
டைனோசர்ஸ்
- 0
- 0
- 0
வாரம் | 1 | 2 | 3 |
---|---|---|---|
தரவரிசை | 264 | 253 | 164 |
Point | 111 | 123 | 18 |
வாழ நினைக்கும் இளைஞர்கள் குறித்த கதை
டைனோசர்ஸ்
கதைக்களம்
ரிஷியும் அவரது தம்பி உதய் கார்த்திக்கும் எந்த ஒரு பிரச்சினைக்கும் செல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இவருடைய நண்பர் மாறா பிரபல ரவுடியுடன் சேர்ந்து கொலைகளை செய்து பின்னர் திருந்தி வாழ்ந்து வருகிறார். ரிஷிக்கு திருமணம் செய்ய பெண் பார்க்க செல்கின்றனர். அப்போது அந்த பெண்ணுக்கு ரிஷியை பிடிக்காமல் அவருடைய நண்பர் மாறாவை பிடித்து விட, இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர்.இதனை தொடர்ந்து முன்பு செய்த கொலைக்காக மாறாவை போலீஸ் சரண் அடைய சொல்கின்றனர். ஆனால் நண்பனின் வாழ்க்கை தற்போது தான் சரியாக செல்வதால், அந்த பழியை ஏற்றுக் கொண்டு ரிஷி ஜெயிலுக்கு செல்கிறார்.இறுதியில் ரிஷி ஜெயிலில் இருந்து வெளியே வந்தாரா? மாறாவின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
எந்த பிரச்சினைக்கும் செல்லாமல் இருக்க நினைக்கும் இடங்களிலும், வந்த பிரச்சினையை ஒரு கை பார்க்க நினைக்கும் இடங்களிலும் நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார் உதய் கார்த்திக். நண்பனுக்காக எதையும் செய்யும் நபராகவும் பழியை ஏற்று கொண்டு கஷ்டப்படும் நபராகவும் நடிப்பை வித்யாசப்படுத்தியுள்ளார் ரிஷி. ரவுடியாகவும் பின்னர் திருந்தி வாழ்பவராகவும் நடிப்பை கொடுத்துள்ளார் மாறா. மூவரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்து முடித்து கைத்தட்டல் பெறுகின்றனர்.அம்மாவாக நடித்திருக்கும் ஜானகி சுரேஷின் நடிப்பு கவனம் பெறுகிறது. மேலும் படத்தில் இடம்பெறும் சாய் பிரியா தேவா, கவின் ஜேபாபு, யாமினி சந்திரசேகர் அருண் பாலாஜி, ரமணா என அனைவரும் அவர்களின் வேலையை சரியாக செய்துள்ளனர்.
இயக்கம்
கொலை அதனை சுற்றி நடக்கும் பிரச்சினைகளை வைத்து படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் எம்.ஆர்.மாதவன். முதல் பாதியில் விறுவிறுப்புக்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் பார்வையாளர்களை பயம் காட்டியுள்ளார். திரைக்கதை முதல் பாதியில் பலமாக அமைந்துள்ளது. ஆனால் இரண்டாம் பாதி எதிர்பார்த்ததை தாண்டி சற்று ஏமாற்றமே மிஞ்சியது. இரண்டாம் பாதியில் திரைக்கதை வலுவாக இருந்திருந்தால் படம் கூடுதல் சிறப்பாக அமைந்திருக்கும்.
இசை
பின்னணி இசையின் மூலம் படத்தை விறுவிறுப்பாக்கியுள்ளார் இசையமைப்பாளர் போபோ சசி. பாடல்கள் ஓகே.
ஒளிப்பதிவு
கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஜோன்ஸ் வி ஆனந்த்.
படத்தொகுப்பு
கலைவாணன் படத்தொகுப்பில் அசத்தியுள்ளார்.
காஸ்டியூம் டிசைன்
ராதிகா சிவா கதாபாத்திரத்திற்கு ஏற்ற காஸ்டியூமை டிசைன் செய்துள்ளார்.
புரொடக்ஷன்
கேலக்ஸி பிக்சர்ஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து ‘டைனோசர்ஸ்' திரைப்படத்தை தயாரித்துள்ளது.