search icon
என் மலர்tooltip icon
    < Back
    Eppodhum Raja
    Eppodhum Raja

    எப்போதும் ராஜா

    இயக்குனர்: விஜி முருகன்
    வெளியீட்டு தேதி:2024-02-16
    Points:38

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை345305
    Point1622
    கரு

    விளையாட்டு வீரர், போலீஸ் அதிகாரி, இரண்டு பேரும் தங்களது எதிரிகளையும், அவர்களால் வரும் சோதனைகளையும் தாண்டி வாழ்க்கையில் எப்படி சாதிக்கிறார்கள் என்பது கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    கைப்பந்து போட்டியில் தேசிய அளவில் சாதனை படைக்க வேண்டும் என தீவிர முயற்சியில் விளையாட்டு வீரர், தவறை தட்டி கேட்கும் நேர்மையான போலீஸ் அதிகாரி என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வின்ஸ்டார் ராஜா.

    இருவருக்கு எதிராக பிரச்சினைகளும், சோதனைகளும் ஏற்படுகிறது. பிரச்சினைகளை தாண்டி எப்படி சாதித்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வின் ஸ்டார் விஜய் காதல், விளையாட்டு, காமெடி கலந்த ஆக்‌ஷன் என யதார்த்தமான தனது நடிப்பை கொடுத்து உள்ளார். கதாநாயகியுடனும் கும்தாஜீடனும் ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்களுக்கு பொறாமை அடைய செய்கிறது.

    பெரும்பாலான காட்சிகளில் நாடகத்தன்மை வெளிப்பட்டிருப்பது படத்திற்கு பலவீனம். கதாநாயகி டெப்ளினா கவர்ச்சியில் தாராளம் காட்டி ரசிக்க வைக்கிறார். வில்லி கதாபாத்திரத்தில் வரும் கும்தாஜ் மது அருந்துவதும், புகை பிடிப்பதும் என பெண் தாதாவாக மிரட்டியுள்ளார்.

    விளையாட்டில் சாதனை படைக்க துடிக்கும் வின்ஸ்டார் விஜய்க்கு ஊக்கமளிக்கும் லயன்குமார், நண்பராக வரும் செல்வகுமார் ஆகியோர் நடிப்பில் கவனத்தை ஈர்க்கின்றனர். ஜோ மல்லூரி, பி.சோம சுந்தரம் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

    இயக்கம்

    எழுதி இயக்கி தயாரித்திருக்கும் நாயகன் வின் ஸ்டார் விஜய், ஒரு திரைப்படத்தை எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம் என்பதற்கான உதாரணமாக இந்த படத்தை எடுத்திருக்கிறார்.

    இசை

    கபிலேஷ்வர், ராம்ஜி இசையில் பாடல்கள் சுமார் ரகம்.

    ஒளிப்பதிவு

    பகவதி பாலா ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. இசையமைப்பாளரும், ஒளிப்பதிவாளரும் கதைக்கு ஏற்றபடி அல்லாமல் தங்களுக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறார்கள்.

    லாஜிக் பார்க்காமல் ஹீரோவை காமெடியாக நினைத்து படத்தை பார்க்கலாம்.


     

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×