என் மலர்


ஃபயர்
நாகர்கோவில் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பயர் திரைப்படம் உருவாகி உள்ளது.
கதைக்களம்
பிசியோ தெரபி மருத்துவரான பாலாஜி முருகதாசை காணவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்கிறார்கள். இதைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜே.எஸ்.சதீஷ்குமார் விசாரணை செய்ய தொடங்குகிறார். விசாரணையில் திடுக்கிடும் வகையில் பல மர்மங்கள் வெளியாகி பாலாஜி முருகதாஸ் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது.
இறுதியில் பாலாஜி முருகதாசை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் பாலாஜி முருகதாஸ் காசி கதாபாத்திரத்தில் பிளே பாயாக வாழ்ந்துள்ளார். ஆனால், நடிப்புதான் வர கஷ்டப்படுகிறது. ஒருசில இடங்களில் செயற்கையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்து இருக்கும் ரச்சிதா, கணவனால் கைவிடப்பட்டு வறுமையினால் கந்து வட்டி பைனான்சியரிடம் சிக்கி சித்ரவதைக்குள்ளாகி அவமானம் அடையும் காட்சியில் பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இன்னொருபுறம் பாலாஜி முருகதாசுடன் படுக்கையறை காட்சிகளில் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். மேலும் நாயகிகளாக நடித்து இருக்கும் சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான் ஆகியோரும் பாலாஜி முருகதாசுடன் நெருக்கமான காட்சிகளில் கிறங்கடித்து விடுகின்றனர்.
இயக்கம்
நாகர்கோவிலில் நடந்த உண்மை சம்பவமான காசி வாழ்க்கையை கருவாக கொண்டு படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜே.எஸ்.சதீஷ்குமார். படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி காட்சி வரை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்த முயற்சி செய்து இருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் ஜே.எஸ்.சதீஷ் குமார், நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். கிளைமாக்ஸ் காட்சியில் சொல்லும் கருத்து சிறப்பு.
ஒளிப்பதிவு
சதீஷ் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது.
இசை
டி.கே.இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.
தயாரிப்பு
JSK பிரைம் மீடியா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.











