என் மலர்


கிளாடியேட்டர் II
- 0
- 0
- 1
வாரம் | 1 | 2 | 3 | 4 | 5 |
---|---|---|---|---|---|
தரவரிசை | 225 | 213 | 146 | 85 | 75 |
Point | 200 | 248 | 51 | 67 | 20 |
இறந்த நாயகன் மேக்ஸிமஸின் மகன் லூசியஸ் வெரஸ் கிளாடியேட்டர் ஆகும் கதை
கதைக்களம்
ரோமானியப் பேரரசை மையமாகக் கொண்டு 2000 ஆம் ஆண்டு வெளியான ‘கிளாடியேட்டர்’ படத்தின் தொடர்ச்சியாக இப்படம் அமைந்துள்ளது. ‘கிளாடியேட்டர் 2’-வில் இறந்த நாயகன் மேக்ஸிமஸின் மகன் லூசியஸ் வெரஸ் தனது தந்தைப் போலவே ரோமானியப் படையால் கைது செய்யப்பட்டு அடிமையாக்கப்பட்டு, பிறகு கிளாடியேட்டர் ஆகிறார்.
கிளாடியேட்டர் ஆகும் ஹென்னே என்பவர் தான் தனது மகன் என்பதை அறிந்துக் கொள்ளும் முன்னாள் ரோமானியப் பேரரசரின் மகள், ஹென்னே யார் என்பதை அவருக்கு புரிய வைப்பதோடு, அவரது தந்தை மேக்சிமஸ் உள்ளிட்ட பல வீரர்கள் சிறந்த ரோமானிய ஆட்சிக்காக உயிரிழந்ததை நினைவுக்கூறுகிறார். தந்தை பற்றியும், அவர்கள் உருவாக்க நினைத்த புதிய ரோமுக்காகவும், ரோமானிய பேரரசை வீழ்த்தும் முயற்சியில் ஈடுபடும் லூசியஸ், அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
லூசியஸாக நடித்திருக்கும் பால் மெஸ்கலும், மார்கஸ் அகாக்யூஸாக நடித்திருக்கும் பெட்ரோ பாஸ்கல், மேக்ரினஸாக நடித்திருக்கும் டென்செல் வாஷிங்டன், லூஸ்லியாவாக நடித்திருக்கும் கோனி நெய்ல்சன் என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை வழங்கியுள்ளனர்.
இயக்கம்
ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் வெளியான ‘கிளாடியேட்டர்’ முதல் பாகம் ரோமானியப் பேரரசு மற்றும் கிளாடியேட்டரின் சண்டைக்காட்சிகளை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருந்தது போலவே இந்த இரண்டாம் பாகமும் பிரமாண்டத்திற்கு பஞ்சமில்லாமல் இருந்தாலும் அந்த பாகத்தில் இருந்த சுவாரசியம் இப்படத்தில் இல்லை. கதைக்களத்தில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். சண்டை காட்சிகள் நினைத்ததுப் போல் பார்வையாளர்கள மனதில் பதியவில்லை.
இசை
ஹாரி க்ரெக்சன் மற்றும் வில்லியம்ஸ் இன் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.
ஒளிப்பதிவு
ஜான் மதீசன் ஒளிப்பதிவு ரோமின் பிரம்மாண்டத்தை உயர்த்தி காட்டியுள்ளது.
தயாரிப்பு
பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.