search icon
என் மலர்tooltip icon
    < Back
    Iravin Kangal
    Iravin Kangal

    இரவின் கண்கள்

    இயக்குனர்: சுரேஷ் குமரன்
    இசை:சார்லஸ் தனா
    வெளியீட்டு தேதி:2024-04-05
    Points:180

    ட்ரெண்ட்

    வாரம்123
    தரவரிசை277256149
    Point699120
    கரு

    மனிதருக்கும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கருவிக்கும் இடையிலான நட்பை சொல்லும் படம்.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    ஐடி துறையில் பணியாற்றும் நாயகன் பாப் சுரேஷ், ஐரிஸ் என்ற செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கருவி ஒன்றை வாங்குகிறார். அந்த கருவி பயன்பாட்டில் இருக்கும் போது, இரவு நேரத்தில் ஏற்படும் திடீர் மின் விபத்தினால் பழுதடைந்துவிடுகிறது. மறுநாள் அதை சரி செய்வதற்காக ஒருவர் வரும் போது கருவி பழையபடி வேலை செய்வதோடு, வழக்கமான செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கருவி என்பதையும் தாண்டி, ஒரு மனிதரைப் போல் நாயகன் பாப் சுரேஷுக்கு பல தகவல்களை கொடுக்கிறது.

    இதற்கிடையே, திருமணமான பாப் சுரேஷ், தனது அலுவலகத்தில் பணியாற்றும் சக பெண் ஊழியரான டோலி ஐஸ்வர்யாவுடன் நெருக்கமாக பழகுகிறார். இதை அறிந்து சுரேஷை சந்திக்க வரும் டோலி ஐஸ்வர்யாவின் முன்னாள் காதலருக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இதில், டோலி ஐஸ்வர்யாவின் காதலர் இறந்து விடுகிறார். விசயத்தை போலீசிடம் சொல்லிவிட சுரேஷ் முடிவு செய்ய, அதற்கு மறுப்பு தெரிவிக்கும் செயற்கை நுண்ணறிவு கருவி ஐரிஸ், இந்த பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்கும், இறந்தவரின் உடலை அப்புறப்படுத்துவதற்கும் யோசனை சொல்கிறது.

    இறுதியில் ஐரிஸின் யோசனைப்படி செய்யும் நாயகன் பாப் சுரேஷ், பிரச்சனையில் இருந்து தப்பித்தாரா?, செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கருவியாக மட்டும் அல்லாமல், மனிதர்களைப் போல் செயல்படும் ஐரிஸ் யார்? என்பதை படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    விக்டர் என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கும் பாப் சுரேஷ், முழு படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார். திருமணம் ஆனவராக இருந்தாலும், தன்னுடன் பணியாற்றும் டோலி ஐஸ்வர்யாவை பார்த்து ஏங்குவதும், அதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததும், அப்பாவியான முகத்தை வைத்துக்கொண்டு அவர் செய்யும் செயல்கள் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    நாயகியாக நடித்திருக்கும் டோலி ஐஸ்வர்யா, திரைக்கதையில் திருப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு அதிக காட்சிகள் இல்லாதது வருத்தம்.

    கிரி துவாரகேஷ், செல்வா, அழகுராஜா, தண்டபாணி, குமரன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    மனிதருக்கும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கருவிக்கும் இடையிலான நட்பை மையமாக வைத்து பாலசுப்ரமணியம்.கே.ஜி, எழுதியிருக்கும் கதை, திரைக்கதையை இயக்கி இருக்கிறார் பாப் சுரேஷ். முதல் பாதி படத்தை மிக சுவாரஸ்யமாக நகர்த்தி, இரண்டாம் பாதியில் அதை தவற விட்டிருக்கிறார்.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் கீதா கரணின் கேமரா, இரவு நேரக் காட்சிகளை மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறது.

    இசை

    சார்லஸ் தனா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை அளவான சத்தத்தோடு, திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×