என் மலர்


ஜாலியோ ஜிம்கானா
4 பெண்களுக்கும் சடலமாக இருக்கும் பிரபுதேவாவுக்கும் இடையே நடக்கும் கதை
கதைக்களம்
பிரபு தேவா அநீதிக்கு போராடும் ஒரு வக்கீலாக இருக்கிறார். அபிராமிக்கு 3 மகள்கள் உள்ளனர். மடோனா செபாஸ்டியன் அதில் மூத்தவர். இவர்களின் தாத்தாவான Y.G மஹேந்திரன் ஒரு ஓட்டல் நடத்தி வருகிறார். ஒரு நாள் அந்த ஓட்டலில் உணவு ஆர்டர் செய்த மந்திரிக்கும் இவருக்கும் இடையே பிரச்சனை ஏற்ப்பட்டு மகேந்திரனை அடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் மகேந்திரன். இதை தட்டிக் கேட்பதற்காக பிரபு தேவாவின் உதவியை நாடுகிறார்கள் அபிராமி மற்றும் அவரது மகள்கள் அப்பொழுது அவரை பார்க்க சென்ற போது அவர் ஏற்கனவே அவர் இறந்துக் கிடக்கிறார். எங்கே இந்த கொலை பழி தங்கள் மீது விழுந்து விடுமோ என பயப்படுகிறார்கள் 4 பெண்களும்.
அதற்கு பிறகு இவர்களுக்கு தெரிய வருகிறது பிரபு தேவாவை ஊட்டியில் உள்ள வங்கிக்கு அழைத்து சென்றால் 10 கோடி ரூபாய் பணம் கிடைக்கும். இதனால் இறந்துப் போன பிரபு தேவாவை யாருக்கும் தெரியாமல் அழைத்துச் செல்ல முயற்சிக்கிறார்கள். இப்பயணத்தில் அவர்கள் சந்திக்கும் சிக்கலே மீதிக்கதையாகும்.
நடிகர்கள்
திரைப்படம் முழுவதும் அமையாக ஒரு நடைப் பிணமாக நடித்து சிரிக்க வைத்துள்ளார் பிரபு தேவா. அபிராமி மற்றும் மடோனா மற்றும் மகள்களாக நடித்த இருவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
இயக்கம்
ஒரு பிணத்தை வைத்து 4 பெண்கள் படும் அவஸ்த்தையை மிகவும் நகைச்சுவையான கற்பனை கதையாக இயக்கியுள்ளார் சக்தி சிதம்பரம். படத்தில் நகைச்சுவை காட்சிகள் வொர்க் அவுட் ஆகாதது படத்தின் மைனஸ். காட்சியமைப்பில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். காட்சிகள் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி இருப்பது பார்வையாளர்களிடையே சலிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
இசை
அஷ்வின் விநாயகமூர்த்தியின் இசை படத்திற்கு கூடுதல் பலம்
ஒளிப்பதிவு
கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு படத்தில் மிகவும் கலர்ஃபுல்லாக அமைந்துள்ளது.
தயாரிப்பு
ராஜன் மற்றும் நீலா இப்படத்தை தயாரித்துள்ளனர்.












