search icon
என் மலர்tooltip icon
    < Back
    கொட்டுக்காளி: Kottukkaali Trailer, Review, Cast & Crew, OTT Release Details in Tamil
    கொட்டுக்காளி: Kottukkaali Trailer, Review, Cast & Crew, OTT Release Details in Tamil

    கொட்டுக்காளி

    இயக்குனர்: பி.எஸ். வினோத்ராஜ்
    எடிட்டர்:கணேஷ் சிவா
    ஒளிப்பதிவாளர்:பி.சக்திவேல்
    வெளியீட்டு தேதி:2024-08-23
    நடிகர்கள்
    Points:1604

    ட்ரெண்ட்

    வாரம்123
    தரவரிசை94105117
    Point72581663
    கரு

    பெண்ணிற்கு எதிராக நிலவும் அடக்குமுறையை பற்றி பேசும் கதை

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    அன்னா பென் கல்லூரியில் யாரையோ காதலித்து விடுகிறார். அது வீட்டிற்கு தெரிந்து பெரும் பிரச்சனை ஆகிவிடுகிறது. சூரி சிறு வயதில் இருந்து தன் அத்தை மகளான அன்ன பென்னை தான் திருமணம் செய்துக் கொள்வேன் என்ற ஆசையில் இருக்கிறார்.

    தற்பொழுது அன்னா பென் காதலித்தது தெரியவந்ததால் கடும் கோபம் அடைகிறார். இதனால் அன்னா பென்னை சாமியாரிடம் அழைத்துச் சென்று மந்திரித்தால் எல்லாம் சரியாகிவிடும் அதற்கு பிறகு அவளை திருமணம் செய்துக் கொள்ளலாம் என நினைத்து அன்னா பென்னை சாமியாரிடம் அழைத்துச் செல்ல முடிவு செய்கின்றனர். இதற்காக சூரி குடும்பம் மற்றும் அவருடைய நண்பர்கள் கிளம்ப இந்த பயணம் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தின் கதாநாயகனாக நடித்து இருக்கும் சூரி நடிப்பில் மீண்டும் மிரட்டியுள்ளார். இதுவரை நாம் பார்த்திராத பரிணாமத்தில் சூரி நடித்துள்ளார். படத்தின் நாயகியான அன்னா பென் பேசாமலயே நடித்து மக்கள் மனதில் பதிந்துள்ளார். பிறகு படத்தில் நடித்த ஊர் மக்கள் மற்றும் சூரியின் குடும்பம் மிகவும் எதார்த்தமான நடிப்பை நடித்து ஸ்கோர் செய்துள்ளனர்.

    இயக்கம்

    உண்மைக்கு மிக நெருக்கமான திரைப்படத்தை மிகவும் எதார்த்தத்துடன் பதிவு செய்ய முயற்சித்துள்ளார் இயக்குனர் வினோத்ராஜ். இசையமைப்பாளர் இல்லாமல் படம் எடுத்ததற்கு பாராட்டுகள். இவர் எடுத்த முடிவினால் உண்மைக்கு மிக நெருக்கமாக நாமும் அந்த ஊர் மக்களோடு மக்களாக ஷேர் ஆட்டோவில் ஒரு ஆளாக பயணிக்க உதவுகிறது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை இன்னும் அழுத்தம் திருத்தமாக கூறி இருந்திருக்கலாம். ஜெனரல் ஆடியன்சிற்கு இப்படம் பிடிக்குமா என்றால் சந்தேகம் தான். கருடனை மனதில் வைத்து இப்படத்திற்கு வராதீர்கள். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படத்தை பார்த்தால் நல்ல ஒரு அனுபவம் கிடைக்கும். இம்மாதிரி கதைக்களத்தை எடுத்து படமாக்கிய வினோத் ராஜுக்கு பாராட்டுகள்.

    ஒலி வடிவமைப்பு

    இப்படத்தில் ஒலி வடிவமைப்பு இன்றியமையாதது. சுரேன் மற்றும் அழகிய கூத்தன் மிகச்சிறப்பான வேலையை செய்துள்ளனர்.

    ஒளிப்பதிவு

    சக்திவேல் மிகவும் எதார்த்தமான ஒளிப்பதிவை சிறப்பாக மேற்கொண்டுள்ளார்.

    தயாரிப்பு

    இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்.கே ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×