search icon
என் மலர்tooltip icon
    < Back
    License
    License

    லைசென்ஸ்

    இயக்குனர்: கணபதி பாலமுருகன்
    எடிட்டர்:வெரோனிகா பிரசாத்
    ஒளிப்பதிவாளர்:சி.காசிவிஸ்வநாதன்
    இசை:பைஜு ஜேக்கப்
    வெளியீட்டு தேதி:2023-11-03
    Points:723

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை163156
    Point314409
    கரு

    துப்பாக்கி லைசென்ஸுக்காக போராடும் ஆசிரியர் குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    ஒரு கிராமத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ராதாரவியின் மகள் ராஜலட்சுமி, சின்ன வயதில் இருந்தே சமூகத்தில் தவறு செய்பவர்களை தட்டி கேட்கும் போராளியாக வளர்ந்து வருகிறார். இவர் போலீஸ் ஆக வேண்டும் என்று சிறுவயதில் ஆசைப்படுகிறார். ஆனால், சில காரணங்களால் முடியாமல் போக ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    தவறுகளை ராஜலட்சுமி தட்டி கேட்பதால் பல எதிர்ப்புகள் அவருக்கு வருகிறது. இந்நிலையில் தனக்கு துப்பாக்கி லைசென்ஸ் வேண்டும் என்று மனு கொடுக்கிறார். இதற்கு பல விசாரணைகளுக்கு பின் போலீஸ் துப்பாக்கி லைசென்ஸ் கொடுக்க மறுக்கிறது. 

    இறுதியில் நீதிமன்றத்தை நாடும் ராஜலட்சுமிக்கு துப்பாக்கி லைசென்ஸ் கிடைத்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    சின்ன மச்சான் செவத்த மச்சான் உள்பட பல பாடல்கள் பாடி பிரபலமடைந்த ராஜலட்சுமி செந்தில் கணேஷ் முதல் முதலாக நாயகியாக அறிமுகம் ஆகியுள்ளார். சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தட்டி கேட்கும் வீரப் போராளியாக அவர் வரும் காட்சிகள் அரங்கமே கைத்தட்டி ரசிக்கிறது. 

    எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் ராஜலட்சுமி, படத்தின் கதைக்கு தகுந்தார் போல் இறுக்கமான முகத்துடன் அநியாயங்களை தட்டி கேட்கும் காட்சிகளில் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். இவரது கணவராக வருபவருக்கு அதிகம் வேலை இல்லை.

    ராஜலட்சுமியின் தந்தையாக வரும் ராதாரவி, அனுபவம் கலந்த நடிப்பை கொடுத்து படத்தின் கதைக்கு மெருகேற்றி உள்ளார். சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் மனதில் நிற்கிறார் அயலி அபிநக்சத்திரா. 

    இயக்கம்

    பெண்களின் உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் ஒரு விழிப்புணர்வு படமாக லைசென்ஸ் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் கணபதி பாலமுருகன். நல்ல கதை என்றாலும், அதை சொல்ல வந்த விதத்தில் சிறிது தடுமாறி இருக்கிறார் இயக்குனர். காட்சிகளின் தொடர்ச்சி இல்லாமல் திரைக்கதை செல்வது படத்திற்கு பலவீனம்.

    இசை

    பைஜு ஜேக்கப் இசையில் பெண்ணுரிமை குறித்து விழிப்புணர்வு பாடல் கேட்கலாம்.

     ஒளிப்பதிவு

    காசி விஸ்வநாதன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

    படத்தொகுப்பு 

    வெரோனிகா பிரசாத் படத்தொகுப்பு அருமை.

    காஸ்டியூம்

    சாரங்க பாணி கதாபாத்திரத்திற்கு ஏற்ற காஸ்டியூம் டிசைன் செய்துள்ளார்.

    புரொடக்‌ஷன்

    ஜே.ஆர்.ஜி. புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் ‘லைசென்ஸ்' திரைப்படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×