search icon
என் மலர்tooltip icon
    < Back
    Local Sarakku
    Local Sarakku

    லோக்கல் சரக்கு

    இயக்குனர்: எஸ் பி ராஜ்குமார்
    எடிட்டர்:ஜே.எஃப் காஸ்ட்ரோ
    இசை:வி ஆர் சுவாமிநாதன்
    வெளியீட்டு தேதி:2024-01-26
    Points:124

    ட்ரெண்ட்

    வாரம்1
    தரவரிசை234
    Point124
    கரு

    குடிக்கு அடிமையான இளைஞன் குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    நாயகன் தினேஷ், வேலைக்கு ஏதும் செல்லாமல் எப்போதும் குடி குடி என்று மதுக்கு அடிமையாக இருக்கிறார். இவரது தங்கை வருமானத்தில் வாழ்ந்து வரும் தினேஷ், ஊரை ஏமாற்றி குடிக்கிறார். ஊர் மக்கள் திட்டி தீர்த்தாலும் அதை பொருட்படுத்தாமல் வாழ்ந்து வருகிறார்.

    இந்நிலையில் நாயகி உபாசனா, தினேஷ் வீட்டிற்கு அருகில் குடி வருகிறார். இவரிடமும் பணம் வாங்கி குடிக்கிறார் தினேஷ். ஒருநாள் இவரது தங்கை தன்னுடன் வேலை பார்க்கும் சென்றாயனுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கிறார். ஒரு வழியாக தங்கையுடன் சமாதானம் ஆகி, நாயகி உபாசனா மற்றும் தங்கையுடன் கோவிலுக்கு செல்கிறார் தினேஷ். அங்கு ஒருவர் தினேஷுக்கும், உபாசனாவுக்கும் திருமணம் ஆகிவிட்டதாக சொல்லிவிட்டு செல்கிறார். தினேஷும் போதையில் தாலி கட்டி விட்டதாக சொல்கிறார்.

    இறுதியில் தினேஷுக்கும் உபாசனாவுக்கும் திருமணம் எப்படி நடந்தது? இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்களா? தினேஷ் குடியை விட்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தினேஷ், படம் முழுக்க குடி போதையிலேயே வருகிறார். நிஜ குடிகாரர்களின் பிரதிபலிப்பாக தெரிகிறார். நடனத்தில் அசத்தும் தினேஷ், நடிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் சிறப்பாக அசத்தலாம். நாயகியாக நடித்திருக்கும் உபாசனா அழகாக இருக்கிறார். ஆனால், அந்த நடிப்பு தான் கொஞ்சம் அழகாக வரவில்லை.

    ஒரு சில காட்சிகளில் வந்து காமெடியில் கைத்தட்டல் வாங்கி இருக்கிறார் யோகி பாபு. சென்ராயன், இமான் அண்ணாச்சி ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள். சாம்ஸ் காமெடியில் அசத்தி இருக்கிறார்.

    இயக்கம்

    மது போதைக்கு அடிமையாக இருக்கும் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார். முதல் பாதியில் தேவையில்லாத காட்சிகள் வைத்து இருக்கிறார். ஒரு சில காட்சிகள் ரசிக்கும் படியாகவும், சில காட்சிகள் வேண்டும் என்றே திணித்தது போல் இருக்கிறது. குடிகாரர்களை மருந்து கொடுத்து திருத்த முடியாது. அவர்களே திருந்தினால் தான் உண்டு என்று சாதாரணமாக சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.

    இசை

    சுவாமி நாதன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்திற்கு உதவி இருக்கிறது.

    ஒளிப்பதிவு

    பழனி மூவேந்தர் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகாக இருக்கிறது.

    படத்தொகுப்பு

    காஸ்ட்ரோ படத்தொகுப்பு கவர்கிறது.

    புரொடக்‌ஷன்

    வராஹா சுவாமி பிலிம்ஸ் நிறுவனம் ‘லோக்கல் சரக்கு’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×