என் மலர்


லவ் யூ ஷங்கர்
சிறுவன் தன்னுடைய கடந்த கால நியாபகங்களுடன் சென்று அவன் வாழ்வின் ரகசியத்தை அறியும் கதை.
கதைக்களம்
கதையின் நாயகனான சிவன்ஷ் 8 வயது சிறுவன் லண்டனில் அவரது பெற்றோர்களுடன் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார். அவருக்கு திடீரென்று எதிர்ப்பாராத விதமாக விபத்து ஏற்படுகிறது. தலையில் பலமாக அடிப்பட்டவுடன் அவரை அங்கு இருக்கும் மருத்துவமனையில் சேர்த்து ட்ரீட்மண்ட் நடக்கிறது.அதற்கு பிறகு அவருக்கு பல கனவுகள் வர ஆரம்பிக்கிறது. அதனால் சிவன்ஷை மனநல டாக்டரிடம் அழைத்து செல்கின்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர் வாரணாசியில் அவனுக்கு முந்தைய வாழ்க்கை இருக்கிறது அவரின் நியாபகங்கள் தான் இவருள் இருக்கிறது என்று கூறுகிறார். பின் சிவன்ஷ் குடும்பத்துடன் கிளம்பி வாரணாசி செல்கிறார், சிவன்ஷ் தனது கடந்தகால வாழ்க்கையில் ருத்ரா (ஸ்ரேயாஸ் தல்படே) என்றும் சிவபெருமானின் பக்திமான் என்றும் விரைவில் அறிந்து கொள்கிறார்.
இப்போது சித்தேஷ்வர் என்ற மோசடி குருவாக இருக்கும் சித்து (அபிமன்யு சிங்) என்பவரால் ருத்ரா கொல்லப்பட்டதையும் அவர் அறிகிறார். சிவன்ஷ் கடந்தகால வாழ்க்கையில் கொலை செய்ததற்கு பழிவாங்குவதாக சத்தியம் செய்கிறார். சிவபெருமான் அவரது பணியை நிறைவேற்ற உதவுகிறார்.
அவனின் கடந்த கால வாழ்கையை நாசம் செய்த நபரை சிவன்ஷ் பழி தீர்ப்பானா? என்பது மீதிக்கதை.
நடிகர்கள்
ஷ்ரேயாஸ் தல்படே மிகவும் அழகாக கொடுத்த ருத்ரா கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார். ருத்ராவின் மனைவியாக நடித்திருக்கும் தனிஷா முக்கர்ஜி நடிப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். சஞ்சய் மிஷ்ரா அவரின் இயல்பான நடிப்பின் மூலம் பார்வையாளர்களை கவர்கிறார். சிறுவனாக நடித்திருக்கும் சிவன்ஷ் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்.
இயக்கம்
ராஜிவ் இப்படத்தில் சுவாரசியமான கதைக்களத்தை எடுத்து இருந்தாலும் கூட படத்தின் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாம் பாதி பார்வையாளர்களுக்கு சலிப்பை தட்டுகிறது. அனிமேஷன் காட்சிகளும் சிறப்பாக அமையவில்லை. சோட்டா பீம் அனிமேஷன் காட்சிகளைப் போல சுமாராக உள்ளது.
இசை
வர்தன் சிங் இசை கேட்கும் ரகம், பின்னணி இசை ஆங்காங்கே வொர்க் அவுட் ஆகிருக்கிறது.
ஒளிப்பதிவு
வழக்கமான ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார் ஜாவத்.
தயாரிப்பு
எஸ்டி வர்ல்ட் பிலிம் புரொடக்ஷன் இப்படத்தை தயாரித்துள்ளது.








