search icon
என் மலர்tooltip icon
    < Back
    மழை பிடிக்காத மனிதன் படத்தின் திரைவிமர்சனம் விரைவில்.. | Movie review of the Mazhai Pidikatha Manithan soon..
    மழை பிடிக்காத மனிதன் படத்தின் திரைவிமர்சனம் விரைவில்.. | Movie review of the Mazhai Pidikatha Manithan soon..

    மழை பிடிக்காத மனிதன்

    இயக்குனர்: vijay milton
    எடிட்டர்:பிரவீன் கே.எல்
    ஒளிப்பதிவாளர்:vijay milton
    இசை:விஜய் ஆண்டனி
    வெளியீட்டு தேதி:2024-08-02
    Points:4206

    ட்ரெண்ட்

    வாரம்123
    தரவரிசை5453103
    Point1728239187
    கரு

    தலைமறைவாக வாழும் கதாநாயகனை தேடி வரும் பிரச்சனை

    விமர்சனம்

    கதைக்களம் 

    விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் படத்தின் கதையில் இருந்து மழை பிடிக்காத மனிதன் கதை தொடங்குகிறது.

    சலீம் படத்தில் அமைச்சர் மகனை கொலை செய்துவிட்டு செல்கிறார் விஜய் ஆண்டனி. அதன் பிறகு இராணுவத்தில் சேரும் விஜய் ஆண்டனி, மனைவியுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு குண்டு வெடிப்பில் மனைவியை இழக்கும் விஜய் ஆண்டனி, காயங்களுடன் உயிர் தப்பிக்கிறார்.

    மனைவியை இழக்கும் போது மழை பெய்து கொண்டு இருப்பதனால் விஜய் ஆண்டனிக்கு மழை என்றாலே பிடிக்காது. 

    இவரை காப்பாற்றும் இராணுவ அதிகாரி சரத்குமார், விஜய் ஆண்டனி இறந்துவிட்டதாக அறிவித்து அவரை அந்தமானில் வாழ வைக்கிறார்.

    அந்தமானில் எந்த வம்புக்கும் செல்லாமல் வாழும் விஜய் ஆண்டனிக்கு ஒரு தாதா மூலம் பிரச்சனை வருகிறது. ஒரு பக்கம் அமைச்சர் விஜய் ஆண்டனியை தேடுகிறார்.

    இறுதியில் விஜய் ஆண்டனியின் வாழ்க்கை என்ன ஆனது? விஜய் ஆண்டனி உயிருடன் இருப்பது அமைச்சருக்கு தெரிந்ததா? விஜய் ஆண்டனிக்கும் தாதாவுக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள் 

    படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கும் விஜய் ஆண்டனி, முதல் பாதி அமைதியான நடிப்பையும், இரண்டாம் பாதி அதிரடியான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

    நாயகியாக நடித்து இருக்கும் மேகா ஆகாஷ், அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். இவரை காதலிப்பவராக வரும் பிருத்வி அம்பர் துள்ளலான நடிப்பு மூலம் கவர்ந்து இருக்கிறார். வில்லத்தனத்தில் மிரட்ட முயற்சி செய்து இருக்கிறார் டாலி. சரத்குமார் மற்றும் சத்யராஜ் ஆகியோர் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.

    இயக்கம் 

    சலீம் படத்தின் இறுதி காட்சியை வைத்து படத்தை தொடங்கி இருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன். முதல் பாதி, கதை எங்கு செல்கிறது என்று தெரியாமல் திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். இரண்டாம் பாதி யூகிக்க முடியும் படியான திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். சரத்குமார் மற்றும் சத்யராஜ் நடிப்பு வீணடிக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதை வலுவில்லாமல் இருப்பது படத்திற்கு பலவீனம்.

    ஒளிப்பதிவு 

    படத்திற்கு பெரிய பலம் விஜய் மில்டன் ஒளிப்பதிவு. குறிப்பாக சண்டை காட்சிகளை அழகாக படம் பிடித்து இருக்கிறார். 

    இசை

    அச்சு மணி, விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் அதிகம் கவரவில்லை. பின்னணி இசை பல படங்களின் சாயல் தெரிகிறது.

    தயாரிப்பு

    இன்ஃபினிடி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×