search icon
என் மலர்tooltip icon
    < Back
    Ninnu Vilaiyadu
    Ninnu Vilaiyadu

    நின்னு விளையாடு

    இயக்குனர்: C. சௌந்தரராஜன்
    வெளியீட்டு தேதி:2024-05-03
    Points:87

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை303281
    Point3948
    கரு

    தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் படம்.

    விமர்சனம்

    கதைக்களம்

    மதுரை அருகே உள்ள கிராமத்தில் தாய் தீபா ஷங்கர் மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார் தினேஷ் மாஸ்டர். ஜல்லிக்கட்டு மீது தீவிர ஆர்வம் கொண்ட தினேஷ், ‘கருப்பன்’ என்ற ஜல்லிக்கட்டு காளையை தங்கள் வீட்டில் குழந்தையை போல் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் தினேஷின் கருப்பன் காளை பங்கேற்று போட்டியில் வெற்றி பெறுகிறது. இதைத் தொடர்ந்து ஊரே தினேஷையும் அவரது குடும்பத்தையும் புகழ்ந்து தள்ளுகிறது.

    போட்டியில் பங்கேற்ற பின் கருப்பன் காளை வீடு திரும்பவில்லை. இது ஒருபுறமிருக்க அதே ஊரைச் சேர்ந்த நந்தனாவும் தினேஷும் காதலித்து வருகின்றனர். அவர்களின் காதலுக்கு நந்தனாவின் தந்தை எதிர்ப்பு தெரிவித்து வேறு ஒருவருக்கு நந்தனாவை நிச்சயம் செய்கிறார்.

    இறுதியில் நந்தனாவை தினேஷ் கரம் பிடித்தாரா? தினேஷ் வளர்த்த கருப்பன் காளை திரும்ப கிடைத்ததா?  என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்


    காதலா? காளையா? என்ற பாச போராட்டத்தில் தினேஷ் மாஸ்டரின் யதார்த்த நடிப்பு பாராட்ட வைக்கிறது. தினேஷ் தாயாக தீபா ஷங்கர் படத்தின் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். குழந்தையாக நினைத்து வளர்த்த காளையை காணாமல் கதறி துடிப்பது, மகனையும், மகளையும் நினைத்து வருந்தும் காட்சிகளில் நடிப்பில் முத்திரை பதித்துள்ளார். கதாநாயகியான நந்தனா கேரள வரவாக இருந்தாலும் தமிழகத்தின் பாரம்பரிய கதையால் அவரது நடிப்பு சிறப்பு.

    இயக்கம் 

    தமிழர்களின் வீர விளையாட்டான  ஜல்லிக்கட்டை மையப்படுத்தி படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சவுந்தர்ராஜன். சாமானியன் வாழ்வியலை உறவாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்ல முயற்சி செய்து இருக்கிறார். ஆனால், பெரியதாக எடுப்படவில்லை.

    இசை 

    சத்யதேவ் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    ஒளிப்பதிவு 

    பிச்சு மணியின் ஒளிப்பதிவு திரைக்கதைக்கு பொருந்த வில்லை.

    தயாரிப்பு

    எம் . கார்த்திக்  நின்னு விளையாடு திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×