search icon
என் மலர்tooltip icon
    < Back
    Niyathi
    Niyathi

    நியதி

    இயக்குனர்: நவீன்குமார் சந்திரன்
    ஒளிப்பதிவாளர்:பிரபு கண்ணன்
    இசை:ஜாக் வாரியர்
    வெளியீட்டு தேதி:2024-01-26
    Points:10

    ட்ரெண்ட்

    வாரம்1
    தரவரிசை400
    Point10
    கரு

    சடலத்தை புதைக்க சென்று மாட்டிக்கொள்பர் குறித்த கதை.

    விமர்சனம்

    கதைக்களம்

    நாயகன் நவீன் கோயம்புத்தூரில் உள்ள துப்பறியும் ஏஜென்சியில் வேலை பார்த்து வருகிறார். இவர் கேசுகளை சாதுரியமாக கையாண்டு உண்மைகளை கண்டுப்பிடிக்கிறார். ஒருநாள் தேனி முருகன், தன்னுடைய மகள் அஞ்சனா பாபு கல்லூரி நூலகத்தில் உள்ள நபரை காதலிக்கிறார். அவரை பற்றி விசாரித்து தரும்படி நவீனிடம் கேட்கிறார்.

    இந்நிலையில் ஒருநாள் நள்ளிரவு நவீன் காரில் சென்று கொண்டிருக்கும் போது, விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழக்கிறார். இறந்த நபர் தேனி முருகன் ஒருவரை பற்றி விசாரிக்க சொன்னவர் என்பது நவீனுக்கு தெரிகிறது. என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் நவீன், அந்த சடலத்தை காரில் எடுத்து சென்று யாருக்கும் தெரியாமல் புதைத்துவிடுகிறார்.

    மறுநாள் நவீனுக்கு ஒரு போன் வருகிறது. அதில் புதைத்த சடலத்தை எடுத்து வர சொல்லி சொல்கிறார். நவீனும் அந்த சடலத்தை எடுத்து அவரை சோதனை செய்கிறார். அப்போது அவரிடம் ஒரு மெமரி கார்டு இருப்பது தெரிய வருகிறது. அதில் என்ன இருக்கிறது என்பதை விசாரிக்க ஆரம்பிக்கிறார்.

    இறுதியில் நவீன் அந்த மெமரி கார்டில் இருப்பதை கண்டுப்பிடித்தாரா? நவீனை போனில் மிரட்டும் மர்ம நபர் யார்? எதற்காக மிரட்டுகிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் நவீன் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். விசாரிக்கும் விதம், விபத்து ஏற்பட்டவுடன் வருந்துவது என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

    நாயகியாக வரும் அஞ்சனா பாபு யதார்த்தமாக நடித்து இருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து துணிச்சலாக நடித்து கவனத்தை ஈர்த்து இருக்கிறார். இவருடைய கதாபாத்திரம் ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மற்றொரு நாயகி கோபிகா சுரேஷ் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார். அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் தேனி முருகன். இவரும் மகள் அஞ்சனா பாபுவும் பேசும் காட்சிகள் நெகிழும் படி உள்ளது.

    இயக்கம்

    கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் நவீன். படம் ஆரம்பத்திலேயே திரைக்கதை வேகம் எடுக்கிறது. அடுத்துதடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை உருவாக்கி இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். நடிப்பு, இயக்கம் என இரண்டிலும் தன் திறமையை நிரூபித்து இருக்கிறார். வழக்கமான கிரைம் திரில்லர் திரைப்படம் போல் இல்லாமல் வித்தியாசம் காண்பித்து இருப்பது சிறப்பு. இரண்டாம் பாதியில் வழக்கமான சினிமாத்தனமாக படத்தை இயக்கி இருக்கிறார்.

    இசை

    கிரைம் திரில்லர் படத்திற்கு தேவையான பின்னணி இசையை கச்சிதமாக கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் ஜாக் வாரியர்.

    ஒளிப்பதிவு

    பிரபு கண்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.

    படத்தொகுப்பு

    அஜு வில்பரின் படத்தொகுப்பு சிறப்பு.

    புரொடக்‌ஷன்

    ஜீனியஸ் பிலிம் கம்பெனி ‘நியதி’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×