search icon
என் மலர்tooltip icon
    < Back
    போகுமிடம் வெகுதூரமில்லை: Pogumidam Vegu Thooramillai Trailer, Review, Cast & Crew, OTT Release Details in Tamil
    போகுமிடம் வெகுதூரமில்லை: Pogumidam Vegu Thooramillai Trailer, Review, Cast & Crew, OTT Release Details in Tamil

    போகுமிடம் வெகுதூரமில்லை

    இயக்குனர்: மைக்கேல் கே ராஜா
    எடிட்டர்:தியாகராஜன் எம்
    ஒளிப்பதிவாளர்:டெமல் சேவியர் எட்வர்ட்ஸ்
    இசை:என். ஆர். ரகுநந்தன்
    வெளியீட்டு தேதி:2024-08-23
    Points:950

    ட்ரெண்ட்

    வாரம்1234
    தரவரிசை15414494107
    Point3474771224
    கரு

    உடலை ஏற்றிக் கொண்டு செல்லும் அமரர் ஊர்தி ஓட்டுனர் சந்திக்கும் பிரச்சனையை பற்றிய கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    நடிகர் விமல் அமரர் ஊர்தி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். விமலின் மனைவி தற்பொழுது கர்பமாக உள்ளார். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த  ஒரு ஊர் தலைவர் விபத்தில் சிக்கி இறக்கிறார். அவருக்கு இரு மகன்கள் உள்ளனர். இதில் யார் அவருக்கு கொள்ளிப்போடுவது என்ற பிரச்சனை நிலவி வருகிறது.

    தன் மனைவியை பிரசவத்திற்கு தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, மருத்துவ செலவிற்கு காசில்லாமல் அலையும் போது. அந்த ஊர் தலைவரின் உடலை நெல்லை மாவட்டத்தில் சேர்த்தால் கொஞ்சம் காசு கிடைக்கும் என அந்த பணியை ஏற்கிறார் விமல். உடலை எடுத்து கொண்டு போகும் வழியில் கூத்தாடி கலைஞனான கருணாஸ் வண்டியில் லிஃப்ட் கேட்டு ஏறுகிறார். அதற்கடுத்து போகும் வழியில் பல பிரச்சனைகள் உருவாகிறது. கருணாஸ் பின்னணி என்ன? உடல்களை பத்திரமான சேர்த்தாரா விமல்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    விமல் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார். கூத்தாடி கலைஞனாக நடித்து இருக்கும் கருணாஸ் படத்தின் ஹைலைட் என்றே சொல்லலாம். ஒரு கலைஞனின் வலியையும் , வேதனையும் அவரது அனுபவ நடிப்பால் மக்கள் மனதில் பதிந்துள்ளார். ஊர் தலைவரின் மகன்களாக நடித்து இருக்கும் ஆடுகளம் நரேன் மற்றும் பவன் அவர்களுக்கு கொடுத்த வேலையை செய்துள்ளனர். தன் 'டெம்ப்ளேட்டான' அழுகையும் கத்தலுமாக வந்து போகிறார் தீபா சங்கர். 

    இயக்கம்

    மிக சுவாரசியமான திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குனர் மைக்கேல் கே ராஜா. அடுத்து என்ன? அடுத்து என்ன? என்ற விறுவிறுப்பை படம் முடியும் வரை தக்க வைத்தது படத்தின் பெரிய ப்ளஸ். கருணாஸின் கதாப்பாத்திரத்தின் வடிவமைப்பு அபாரம். படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை மிகச் சிறப்பாக இயக்கியுள்ளார். நாடக பாணியிலான காட்சிகள் ஆங்காங்கே சலிப்பை ஏற்படுத்துகிறது.

    ஒளிப்பதிவு

    திரைக்கதையின் ஓட்டத்துக்கு ஒளிப்பதிவு பெருமளவு உதவி இருக்கிறது. நெடுஞ்சாலையில் இடம் பெற்ற காட்சியில் சிறப்பாக படம்பிடித்துள்ளார் டெமல் சேவியர் மற்றும் எட்வர்ட்ஸ்

    இசை

    என்.ஆர் ரகுநந்தனின் இசையில் இடம் பெற்ற பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை படத்திற்கு பெரிதும் உதிவி இருக்கிறது.

    தயாரிப்பு

    சிவா கில்லாரி இப்படத்தை தயாரித்துள்ளார்.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×