search icon
என் மலர்tooltip icon
    < Back
    ரகு தாத்தா| Raghu Thatha:  Trailer, Review, Cast & Crew, OTT Release Details in Tamil
    ரகு தாத்தா| Raghu Thatha:  Trailer, Review, Cast & Crew, OTT Release Details in Tamil

    ரகு தாத்தா

    இயக்குனர்: சுமன் குமார்
    எடிட்டர்:டி.எஸ்.சுரேஷ்
    ஒளிப்பதிவாளர்:யாமினி யக்ஞமூர்த்தி
    இசை:ஷான் ரோல்டன்
    வெளியீட்டு தேதி:2024-08-15
    Points:863

    ட்ரெண்ட்

    வாரம்123
    தரவரிசை134157165
    Point44340812
    கரு

    இந்தி திணிப்பும் தாத்தாவின் கடைசி ஆசையைப் பற்றி பேசும் கதை.

    விமர்சனம்

    கதைக்களம்

    இக்கதை 1960 களில் நடக்கும் சூழல் கதையாக அமைந்து இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் ஒரு அழகிய ஊரான வள்ளுவன்பேட்டை என்ற கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு தமிழ் மொழி மீது மிகப் பெரிய பற்று இருக்கிறது. பெரியார் சிந்தனையும், பெண்ணிய கருத்துகளை அதிகம் பேசக்கூடிய நபர். ஊரில் இந்தி சபா வரக்கூடாது என போராட்டம் நடத்துகிறார். அந்த ஊரில் உள்ள வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.

    கீர்த்தி சுரேஷை ஒருதலையாக காதலித்து வருகிறார் கதாநாயகனான ரவீந்தர். இவர் முற்போக்கு சிந்தனையாளராக தன்னை சித்தரித்து கீர்த்தி சுரேஷிடம் நடந்துக் கொள்கிறார். வீட்டில் கீர்த்தி சுரேஷிற்கு திருமணம் நடத்த வேண்டும் என குடும்பத்தினர் வற்புறுத்துகின்றனர்.

    ஒரு கட்டத்தில் தன்னுடைய தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேத்த வேண்டும் என முடிவெடுத்து ரவீந்தரை திருமணம் செய்துக் கொள்ள சம்மத்திக்கிறார் கீர்த்தி சுரேஷ். நிச்சயம் ஆன பிறகு ரவீந்தர் உண்மையில் மிகவும் மோசமானவர், பெண் அடிமைத்தனத்தை ஆதரிப்பவர் என கீர்த்தி சுரேஷுக்கு தெரிய வருகிறது.

    உண்மை தெரிந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் இறுதியில் ரவீந்தரை திருமணம் செய்தாரா? தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்றினாரா? என்பதே படத்தின் மீதிக் கதை.

    நடிகர்கள்

    கீர்த்தி சுரேஷ் பெண்ணியம் பேசும் நயராக துறுதுறுவெனவும் அதே சமயம் தன்னம்பிக்கையாக நடித்து இருக்கிறார். கதாநாயகனாக நடித்து இருக்கும் ரவீந்திர விஜய் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவரது உடல் மொழி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. கீர்த்தி சுரேஷிற்கு அண்ணனாக நடித்த ராஜேஷ் பாலச்சந்திரன் அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

    அண்ணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கும் இஸ்மத் பானு டைமிங்கில் பேசி பார்வையாளார்களின் மனதில் பதிந்துள்ளார். மாமி கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கும் தேவதர்ஷினி மிகவும் சிறப்பான நகைச்சுவையை வெளிப்படுத்தியுள்ளார்.

    தாத்தாவாக எம்.எஸ் பாஸ்கர் அவரது குசும்புதனத்தை விட்டுக்கொடுக்காமல் நடித்து இருக்கிறார். வங்கி மேலாளராக நடித்து இருக்கும் ராஜிவ் ரவிந்திரனாதன், பிழையான தமிழில் பேசி ஸ்கோர் செய்துள்ளார்.

    இயக்கம்

    இந்தி திணிப்பையும் ஆண் ஆதிக்கத்தையும் மையமாக கதையை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுமன்குமார். முதல் பாதி சற்று தொய்வாக சென்றாலும், இரண்டாம் பாதியில் அதை சரிக்கட்டிருக்கிறார். படத்தில் இடம் பெற்ற நகைச்சுவை காட்சிகள் பல இடங்களில் வொர்க் அவுட் ஆகியுள்ளது. படத்தின் வசனம் மிகவும் அழுத்தமாக எழுதியுள்ளார். இன்னும் இந்தி திணிப்பால் சமூகத்திற்கு ஏற்படும் பிரச்சனையை இன்னும் அழுத்தமாக சொல்லிருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும். இந்தி திணிப்பையும் கலாச்சார திணிப்பையும் ஒன்றாக இணைத்து சொன்னவிதம் பாராட்டுக்குறியது.

    இசை

    ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் சிறப்பு. பின்னணி இசையை ரசிக்கும் படி கொடுத்து இருக்கிறார்.

    ஒளிப்பதிவு

    யாமினி யாக்னாமூர்த்தியின் ஒளிப்பதிவு 60களில் காலகட்டத்திற்கு ஏற்றார் போல் அழகாக படம் பிடித்து இருக்கிறது.

    தயாரிப்பு

    கொம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் ரகு தாத்தா திரைப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×