search icon
என் மலர்tooltip icon
    < Back
    Rathnam
    Rathnam

    ரத்னம்

    இயக்குனர்: Hari
    எடிட்டர்:டி.எஸ்.சுரேஷ்
    ஒளிப்பதிவாளர்:எம் சுகுமாறன்
    இசை:தேவி ஸ்ரீ பிரசாத்
    வெளியீட்டு தேதி:2024-04-26
    Points:9779

    ட்ரெண்ட்

    வாரம்1234
    தரவரிசை21264465
    Point32965007138987
    கரு

    விடாமல் துரத்தும் மர்ம கும்பலிடம் இருந்து நாயகியை காப்பாற்றும் நாயகனின் கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம் 

    சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த நாயகன் விஷால், சமுத்திரகனி அரவணைப்பில் வளர்கிறார். வேலூரில் எம்.எல்.ஏ. மற்றும் தாதாவாக இருக்கும் சமுத்திரகனி சொல்லும் வேலைகளை எல்லாம் விஷால் செய்து முடிக்கிறார். இந்நிலையில் வேலூருக்கு தேர்வு எழுத வரும் பிரியா பவானி சங்கரை பார்த்தவுடன் அவர் பின்னாலே செல்கிறார்.

    தேர்வு எழுதும் நேரத்தில் பிரியா பவானி சங்கரை ஒரு கும்பல் தாக்க வருகிறது. அந்த கும்பலிடம் இருந்து அவரை விஷால் காப்பாற்றுகிறார். தொடர்ந்து பிரியா பவானி சங்கருக்கு அந்த கும்பல் மூலம் பிரச்சனை வருகிறது.

    இறுதியில் அந்த மர்ம கும்பல் யார்?  பிரியா பவானி சங்கரை கொலை செய்ய துரத்த காரணம் என்ன? பிரியா பவானி சங்கரை விஷால் பாதுகாக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் விஷால், சென்டிமென்ட், ஆக்ஷன், பாசம் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக சிங்கிள் ஷாட் ஆக்ஷன் காட்சியில் சிறப்பாக நடித்து இருக்கிறார்.

    நாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கருக்கு நடிக்கும் வாய்ப்பு அதிகம் கிடைத்துள்ளது. அவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார். குறிப்பாக விஷால் மீது அக்கறை காட்டும் இடத்தில் கவனிக்க வைத்து இருக்கிறார்.

    படத்திற்கு பெரிய பலம் சமுத்திரகனி நடிப்பு. விஷாலுக்காக இவர் எடுக்கும் முயற்சிகள் ரசிக்க வைக்கிறது. பல காட்சிகளில் கைத்தட்டல் வாங்கி இருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிந்து இருக்கிறார் கவுதம் வாசுதேவ் மேனன்.

    முரளி சர்மா வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். இவருக்கு உறுதுணையாக வரும் ஹரிஷ் பெரடி, முத்துகுமார் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள். மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு ஆகியோர் ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார்கள்.

    இயக்கம் 

    அம்மா சென்டிமென்ட்டை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஹரி. தன் படங்களுக்கு உண்டான அதே ஸ்டைலில் திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்து இருக்கிறார். கதாபாத்திரங்கள் இடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். சிங்கிள் ஷாட் ஆக்ஷன் மற்றும் காட்சிகள் வைத்து ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.

    இசை 

    தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.

    ஒளிப்பதிவு 

    சுகுமாரியின் ஒளிப்பதிவை பாராட்டலாம். ஆக்ஷன் காட்சிகளை சிறப்பாக படம் பிடித்து இருக்கிறார்.

    தயாரிப்பு

    ஸ்டோன் பென்ச்  பிலிம்ஸ் சார்பாக கார்த்திகேயன் சந்தானம்   இப்படத்தை தயாரித்துள்ளார்.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    2024-05-03 10:46:01.0
    KALI RAJ

    2024-04-30 09:25:14.0
    Venkadesh Varadharajan

    ×