என் மலர்
ரூட் நம்பர் 17
- 0
- 0
- 0
வாரம் | 1 | 2 | 3 |
---|---|---|---|
தரவரிசை | 240 | 200 | 120 |
Point | 152 | 242 | 69 |
மர்மமாக கடத்தப்படும் காதல் ஜோடிகள் குறித்த கதை.
கதைக்களம்
ஒரு காட்டுப் பகுதிக்கு ஒரு காதல் ஜோடி காரில் பயணம் செய்கின்றனர். விடுமுறையை கழிக்க அன்று இரவு அந்த நடுக்காட்டில் தங்குகின்றனர். அவர்களை ஜித்தன் ரமேஷ் பிடித்து குகையில் அடைத்து விடுகிறார். கடத்தப்பட்ட நபர் முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் என்பதால் போலீசார் அவர்களை தீவிரமாக தேடுகின்றனர்.
இறுதியில் ஜித்தன் ரமேஷ் அவர்களை கடத்த காரணம் என்ன? போலீசார் அந்த ஜோடியை காப்பாற்றினார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமான ஜித்தன் ரமேஷ் இதுவரை இல்லாத வகையில் ஒரு வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சு பாண்டியா நடித்துள்ளார். உடல் முழுவதும் சேரும் சகதியுடன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
அரசியல்வாதியாக வரும் ஹரிஷ் பேரடி, போலீஸ் கதாபாத்திரத்தில் வரும் ஜார்ஜ் மற்றும் அருவி மதன் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இயக்கம்
இன்வெஸ்டிகேஷன் திரில்லர் வடிவில் இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் அபிலாஷ் தேவன். நடிகர்களை சிறப்பாக வேலை வாங்கியுள்ளார். முதல் பாதி கவனத்தை ஈர்த்தாலும் இரண்டாம் பாதி சற்று தொய்வை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் வரும் சில லாஜிக் மிஸ்டேக்குகள் படத்துடன் நம்மை ஒன்ற விடாமல் செய்கிறது.
இசை
அவுசப்பச்சன் இசை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
ஒளிப்பதிவு
பிரசாந்த் பிரணவம் திரில்லர் படத்திற்கு ஏற்ற ஒளிப்பதிவை செய்துள்ளார்.
படத்தொகுப்பு
அகிலேஷ் மோகன் படத்தொகுப்பு ஓகே.
புரொடக்ஷன்
நேமி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ‘ரூட் நம்பர் 17’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.