என் மலர்


சாரி
மாடலுக்கும் ஒரு போட்டோகிராபருக்கும் நடக்கும் காதல் கதையாக சாரி திரைப்படம் அமைந்துள்ளது.
கதைக்களம்
கதாநாயகியான ஆராத்யா தேவி சேலை கட்டுவது மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. இவர் நாள் முழுவதும் சேலை கட்டிக் கொண்டு இருப்பது வழக்கம். இவர் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகிறார், அந்த ரீல்சில் யாராவது தவறான கண்ணோட்டத்துடன் கமெண்ட் செய்தால் அவர்களை தேடிச்சென்று அடிப்பது கதாநாயகி அண்ணான சாஹல். இப்படி இருக்கும் சூழ்நிலையில் போட்டோகிராபரான சத்யா ஒரு பொது இடத்தில் வைத்து ஆராத்யாவை பார்க்கிறார். பார்த்தவுடன் அவரை பிடித்துவிடுகிறது இதனால் அவரை பிந்தொடர்ந்து சென்று ஆராத்யாவை இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை கண்டுபிடித்து அவரை வைத்து ஒருமாடல் ஷூட் செய்வதற்கு கேட்கிறார். பல யோசனைக்கு பிறகு ஆராத்யா போட்டோ ஷூட்டிற்கு சம்மதிக்கிறாள். போட்டோஷூட் நடக்கும் போது சத்யா ஆராத்யாவை தொட கூடாத இடத்தில் தொட. இதை சாஹல் பார்க்க சத்யாவிற்கும் சாஹலிற்கு பகை ஏற்படுகிறது. இதற்கு அடுத்து என்ன ஆனது? சாஹல் சத்யாவை என்ன செய்தான் ? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
அறிமுக நாயகியான ஆராத்யா தேவி அழகான மற்றும் அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். போட்டோகிராபராக நடித்திருக்கும் சத்யா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சைக்கோ கலந்த வில்லன் கதாப்பாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார்.
இயக்கம்
இளைஞர்கள் இந்த டிஜிட்டல் உலகத்தினால் ஏற்படும் பிரச்சனை மற்றும் ஆபத்தை பற்றி பேசியுள்ளார் இயக்குநர் கிரி கிருஷ்ண கமல். கதைக்கு ஒட்டாத தேவை இல்லாத இடத்தில் கவர்ச்சி பாடல்கள் வைத்தது ஏன் என பார்வையாளர்களுக்கு கேள்வி வருகிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கவேண்டும்.
ஒளிப்பதிவு
சபரியின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. கதையோட்டத்திற்கு பெரிதும் உதவியுள்ளது.
இசை
சஷி ப்ரீதமின் இசை கேட்கும் ரகம்.
தயாரிப்பு
ரவி ஷங்கர் வர்மா இப்படத்தை தயாரித்துள்ளார்.











