என் மலர்tooltip icon
    < Back
    Sabari
    Sabari

    சபரி

    இயக்குனர்: அனில் கட்ஸ்
    எடிட்டர்:தர்மேந்திர ககரலா
    இசை:கோபி சுந்தர்
    வெளியீட்டு தேதி:2024-05-03
    Points:37

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை614572
    Point1918
    கரு

    வில்லனிடம் இருந்து தனது 5 வயது மகளை காப்பாற்ற போராடும் தாயின் கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம் 

    கணவர் கணேஷ் வெங்கட்ராமனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு பிரிந்த நாயகி வரலட்சுமி தனது 5 வயது மகளை அழைத்துக் கொண்டு வேரு ஊருக்கு செல்கிறார். வேலை தேடி அலையும் வரலட்சுமி, தனது மகளுக்கு ஆபத்து இருப்பதை உணர்கிறார். மேலும் மன நல காப்பகத்தில் இருந்து தப்பித்த மைம் கோபி, வரலட்சுமி மகளை பின் தொடர்கிறார். இறுதியில் வரலட்சுமி மகளுக்கு ஆபத்து வர காரணம் என்ன? மைம் கோபி, மகள் பின்னால் துரத்த காரணம் என்ன? தன் மகளை வரலட்சுமி காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள் 

    நாயகியாக நடித்து இருக்கும் வரலட்சுமி, முழு கதையும் தன் தோளில் தாங்கி நிற்கிறார். தன் மகளுக்காக துடிக்கும் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார். அதிரடி காட்சி பெரியதாக எடுபடவில்லை. இவருக்கு கணவராக வரும் கணேஷ் வெங்கட்ராமன் வித்தியாசமான வேடம் ஏற்று ரசிக்க வைத்து இருக்கிறார். குழந்தை கிருத்திகா எதார்த்தமான நடிப்பை கொடுத்து இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அதிகம் கவரவில்லை.

    இயக்கம் 

    கணவன் மனைவி ஈகோ, குழந்தை பாசம், குழந்தை மாற்றம் ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் அனில் கட்ஸ். சுவாரஸ்யம் இல்லாத காட்சிகள், யூகிக்க முடிந்த காட்சிகள் ஆகியவை படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது. எமோஷனல் காட்சிகள் சரியாக கனெக்ட் ஆக வில்லை. திரைக்கதை தெளிவில்லாமல் நகர்த்தி இருக்கிறார் இயக்குனர்.

    இசை 

    கோபி சுந்தர் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசை படத்திற்கு பலவீனம்.

    ஒளிப்பதிவு

    ராகுல் ஶ்ரிவட்சாவின் ஒளிப்பதிவு அதிகம் கவரவில்லை.

    தயாரிப்பு

    மஹேந்திர நாத் கொண்ட்லா சபரி படத்தை தயாரித்துள்ளார்.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×