search icon
என் மலர்tooltip icon
    < Back
    Sattam En Kayil:சட்டம் என் கையில் Trailer, Review, Cast & Crew, OTT Release Details in Tamil
    Sattam En Kayil:சட்டம் என் கையில் Trailer, Review, Cast & Crew, OTT Release Details in Tamil

    சட்டம் என் கையில்

    இயக்குனர்: சச்சி
    எடிட்டர்:மார்ட்டின் டைட்டஸ் ஏ
    ஒளிப்பதிவாளர்:பி ஜி முத்தையா
    இசை:எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்
    வெளியீட்டு தேதி:2024-09-27
    Points:3

    ட்ரெண்ட்

    வாரம்1
    தரவரிசை422
    Point3
    கரு

    எதிர்ப்பாராமல் நடந்த ஒரு விபத்தினால் வரும் பிரச்னைகளை மையப்படுத்திய கதை

    விமர்சனம்

    கதைக்களம்

    சதீஷ் அவரது சொந்த ஊருக்கு மது போதையில் காரை ஓட்டிக் கொண்டு செல்கிறார். அப்படி மலை பகுதியில் சென்றுக் கொண்டு இருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக பைக்கில் வந்த ஒருவனை இடித்து விடுகிறார். பைக்கில் வந்தவர் சம்பவ இடத்திலேயே இறந்துப் போகிறார். எங்கு தன் மீது பழி வந்துவிடும் என இறந்த நபரை காரின் டிக்கியில் ஏற்றிக்கொள்கிறார்.

    அடுத்ததாக வரும் சாலையில் காவல்துறையினர் ரோந்து பணியில் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். சதீஷின் காரை வழி மறித்து நிறுத்த சொல்கின்றனர். எங்கு கார் பின்னாடி இறந்த நபர் இருப்பதை கண்டு பிடித்துவிடுவார்களோ என காவல் அதிகாரியிடம் சண்டைப்போட்டு ஒருக்கட்டத்தில் அவரை அடித்து விடுகிறார். இந்த கோவத்தில் வண்டியை பரிசோதிக்காமல் சதீஷை அடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.

    மறுப்பக்கம் அதே பகுதியில் ஒரு பெண் மர்மமான முறையில் பல வெட்டுகளுடன் கொலை செய்யப்படுகிறார். காவல் நிலையத்தில் இறந்த பெண் மற்றும் விபத்தில் சிக்கிய நபரின் தகவல்கள் ஒவ்வொன்றாக வருகிறது. அங்கு இருக்கும் காவல் அதிகாரி சதீஷை எப்படியாவது இந்த பெண் கொலை வழக்கில் குற்றவாலியாக ஆகிவிடவேண்டும் என நினைக்கிறார். இதனால் சதீஷ் பதட்டம் அடைகிறார்.

    எப்படி சதீஷ் இந்த சூழலில் இருந்து வெளியே வருவார்? கொலை செய்யப்பட்ட பெண் யார்? விபத்தில் சிக்கி உயிரிழந்த நபர் யார்? சதீஷ் எப்படி தப்பிப்பார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    நகைச்சுவை டிராக்கை விட்டு விலகி இந்த மாதிரியான புதிய முயற்சிகளை செய்யும் நடிகர் சதீஷூக்கு பாராட்டுக்கள். சதீஷ் அவர் செய்த கொலையை மறைக்கும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

    பாவெல் நவகீதன் மற்றும் அஜய் ராஜ் இருவரின் நடிப்பு இந்த படத்தின் கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.

    இயக்கம்

    ஒரு நாள் இரவு நடக்கும் ஒரு கிரைம் திரில்லர் அடிப்படையில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சாசி. எந்த கதாப்பாத்திரம் சொல்வதை நம்புவது. யார் இங்கு சரியாக இருப்பார் என்ற குழப்பமான மனநிலையிலயே பார்வையாளர்களை படத்தின் காட்சியாகவும் , திரைக்கதையாகவும் விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார்.

    இசை

    ஜோன்ஸ் ரூபர்டின் பின்னணி இசை காட்சியமைப்பில் பெரிது உதவி இருக்கிறது.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் பி.ஜி முத்தையா மிக சவாலான ஒரு முயற்சியை சிறப்பாக கையாண்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். மைப்பிரதேசத்தை காட்சிபடுத்திய விதமும் பனி சூழ்ந்த இரவை காட்சிபடுத்தியிருக்கும் விதமும் கதைக்கு ஏற்ற ஒரு சூழலை ஏற்படுத்தி தருகின்றன.

    தயாரிப்பு

    ஷண்முகம் கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×