என் மலர்tooltip icon
    < Back
    சீன் நம்பர் 62 : Scene Number 62  Bonus Trailer, Review, Cast & Crew, OTT Release Details in Tamil
    சீன் நம்பர் 62 : Scene Number 62  Bonus Trailer, Review, Cast & Crew, OTT Release Details in Tamil

    சீன் நம்பர் 62

    இயக்குனர்: ஆடம் ஜமர்
    எடிட்டர்:ஈஸ்வரமூர்த்தி
    இசை:ஜி.கே.வி
    வெளியீட்டு தேதி:2024-10-25
    Points:176

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை467426
    Point7799
    கரு

    தயாரிப்பாளரிடம் ஒரு இயக்குனர் கூறும் கதையை மையமாக இப்படம் கொண்டுள்ளது.

    விமர்சனம்

    கதைக்களம்

    இத்திரைப்படமே ஒரு இயக்குனர் தயாரிப்பாளரிடம் கூறும் கதையாக அமைந்துள்ளது. 5 நண்பர்கள் உள்ள கூட்டம் நடிப்பதற்கான வாய்ப்பை தேடி வருகின்றனர். அப்பொழுது இவர்களுக்கு ஒரே திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. படத்தின் பயிற்சிக்காக அவர்களை மலை பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு வர சொல்கிறார் அந்த படத்தின் இயக்குனர்.

    இந்த 5 நண்பர்களும் அங்கு செல்கின்றனர். அங்கு ஏற்கனவே  2 நபர்கள் இதேப்போல் பயிற்சிக்காக வந்துள்ளனர். அந்த வீட்டையும் சுற்றியுள்ள மலைகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு அன்று அந்த வீட்டில் உறங்குகிறார்கள். அடுத்தநாள் காலையில் எழுந்து பார்க்க அவர்கள் கால்களும் , கைகளும் விலங்கு அணியப்பட்டு சங்கிலியால் பூட்டப்பட்டு இருக்கிறது. வீட்டின் கதவு , ஜன்னல்கள் மூடப்பட்டு வெளி உலகத்தில் என்ன நடக்கிறது, இரவா பகலா என தெரியாமல்  இருக்கின்றனர். பிறகு அந்த வீட்டில் அவ்வப்போது ஒருவிதமான விஷ வாய்வு வெளியே வந்த வண்ணம் உள்ளது. எதுக்கு இவ்வாறு செய்ய வேண்டும் ? யார் இதை இவர்களுக்கு செய்கிறார்? இதற்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    நண்பர்களாக நடித்த ராஜ்பால், அமல்தேவ்,கோகிலா கோபால், வைதீ, ஐஷ்வர்யா, ரகந்த், கதிரவன் என அனைவரும் ஓரளவுக்கு நடிக்க முயற்சி செய்துள்ளனர். மற்ற நடிகர்கள் நடிப்பில் கூடுதல்

    இயக்கம்

    தயாரிப்பாளரிடம் கதையை கூறுவதுப் போல் நமக்கு கதையை கூறியுள்ளார் இயக்குனர் அதாம் சமர். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். அவர்கள் அடைப்பட்ட காரணத்தை இன்னும் நம்பகத்தன்மையுடன் கூறியிருக்கலாம்.

    ஒளிப்பதிவு

    விஜய் வெங்கட்டின் ஒளிப்பதிவு பெரிதாக கவரவில்லை

    இசை

    ஜிகேவி - யின் பின்னணி இசை ஓரளவுக்கு படத்திற்கு உதவியுள்ளது.

    தயாரிப்பு

    SPR ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×