என் மலர்


சீரன்
அப்பாவின் ஆசையை நிறைவேற்றும் மகனின் கதை
கதைக்களம்
இனியாவுக்கு மகனாக கதாநாயகன் ஜேம்ஸ் கார்த்திக் வளர்ந்து வருகிறார்.
சர்ச்சில் கன்னியாஸ்திரியாக இருக்கும் சோனியா அகர்வாலின் அரவணைப்பில் வளர்கின்றார் கார்த்திக். சிறுவயதில் இருந்தே ஜேம்ஸ் சாதிய வன் கொடுமைகளுக்கு ஆளாகிறார். பள்ளிக்கூடத்தில் அவரை இழிவாக பேசுகின்றனர். ஒருக்கட்டத்தில் அவருக்கு அந்த ஊரில் வாழ முடியாத சூழல் ஏற்படுகிறது.
இதனால் ஜேம்ஸ் இனியாவுடன் வெளிநாட்டிற்கு செல்கிறார். இவர் வாழ்ந்த ஊரில் ஒரு வழக்கம் இருக்கிறது. அந்த ஊரின் கோவிலில் உயர் சாதி குடும்பத்தினர் மட்டுமே வேஷம் கட்டி ஆடவேண்டும் என்ற விதி. தன் அப்பாவிற்காக இதே ஊரில் ஜேம்ஸ் வேஷம் கட்டி ஆடுவேன் என்ற சபத்தத்தை எடுக்கிறார்.
இந்த சபத்தத்தை ஜேம்ஸ் நிறைவேற்றினாரா? ஜேம்ஸின் அப்பா யார்? அவருக்கும் இந்த ஊருக்கும் என்ன பகை ? என்பதே படத்தின் மீதிக்கதை
நடிகர்கள்
கதாநாயகனான ஜேம்ஸ் கார்த்திக் ஓரளவுக்கு நடிக்க முயற்சி செய்து இருக்கிறார். இனியா மூன்று வெவ்வேறு தோற்றத்தில் நடித்து ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் வித்தயாசத்தை கொடுத்து நடித்துள்ளார். சோனியா அகர்வால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்.
இயக்கம்
ஜேம்ஸ் கார்த்தியின் கதையை துரை முருகன் இயக்கியுள்ளார். திரைக்கதை இன்னும் வலுவாக அமைந்து இருக்கலாம். காட்சியமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.
ஒளிப்பதிவு
பாஸ்கர் ஆறுமுகம் சிறப்பான ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
இசை
அரவிந்த் ஜெரால்ட் மற்றும் சசிதரனின் இசை கேட்கும் ரகம்.
தயாரிப்பு
ஜேம்ஸ் கார்த்திக் மற்றும் நியாஸ் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.











