search icon
என் மலர்tooltip icon
    < Back
    Sooragan
    Sooragan

    சூரகன்

    இயக்குனர்: சதீஷ் கீதா குமார்
    ஒளிப்பதிவாளர்:சதீஷ் கீதா குமார்
    இசை:அச்சு ராஜாமணி
    வெளியீட்டு தேதி:2023-12-01
    Points:123

    ட்ரெண்ட்

    வாரம்1
    தரவரிசை235
    Point123
    கரு

    மர்மமான முறையில் இறந்த பெண்ணின் இறப்புக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்யும் போலீஸ் குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    நேர்மையான போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து வரும் நாயகன் கார்த்திகேயன் சில காரணங்களுக்காக காவல்துறை பணியில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார். பணியில் இல்லாவிட்டாலும் சீருடை அணியாத அதிகாரியாக சமூகத்தில் நடக்கும் மர்மங்களை துப்பறியும் பணிகளில் எதிர்ப்புகளுக்கிடையே ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் கார்த்திகேயன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது பெண் ஒருவர் நடுரோட்டில் கைகள் கட்டப்பட்ட நிலையில் பலத்த காயத்துடன் கிடக்கிறார். அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதிக்கிறார். ஆனால் அந்த பெண் சிகிச்சை பலனின்றி மரணமடைகிறார். அந்த பெண் இறப்புக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார் கார்த்திகேயன்.

    இறுதியில் அந்த பெண் இறப்புக்கு யார் காரணம் என்பதை கார்த்திகேயன் கண்டுபிடித்தாரா? மரணமடைந்த பெண் யார்? எதற்காக பெண்ணை அப்படி செய்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    இயக்கம்

    கதாநாயகனான கார்த்திகேயன் புதுமுகம் என்றாலும் அவரது நடிப்பு பாராட்டும் வகையில் உள்ளது. சஸ்பெண்டு ஆகி மனமுடைந்து நின்றாலும் அதே போலீஸ் குணத்துடன் துப்பறியும் காட்சியில் நன்றாக நடித்துள்ளார். சண்டைக்காட்சியில் சாகசம் காட்டியுள்ளார்.

    மீசை இல்லாமல் கையில் துப்பாக்கியுடன் வின்சென்ட் அசோகன் கார்த்திகேயனுடன் மோதும் காட்சிகளிலும், கொலை செய்வதற்காக அவரை தேடி அலையும் காட்சிகளிலும் வில்லனாக படத்தின் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். படத்தில் பெரும்பாலான காட்சிகள் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் வின்சென்ட் அசோகனுக்கு கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பு.

    மன்சூர் அலிகான் தனக்கே உரித்தான பாணியில் கதைக்கு கலகலப்பூட்டுகிறார். சுரேஷ் மேனன் சில காட்சிகளே வந்துள்ளார்.

    கதாநாயகி சுபிக்‌ஷாவுக்கு பெரிய வேலை இல்லை. நிழல்கள் ரவி, பாண்டியராஜன் ஆகியோர் அனுபவ நடிப்பை கொடுத்துள்ளனர்.

    இயக்கம்

    கிரைம் திரில்லர் கதையை திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சதீஷ் கீதா குமார். ஆனால், திரைக்கதை கொஞ்சம் தெளிவில்லாமல் நகர்வது படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது.

    இசை

    அச்சு ராஜாமணி இசையில் பாடல்களை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. பின்னணி இசையில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    ஒளிப்பதிவு

    ஜேசம் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு ஓகே.

    படத்தொகுப்பு

    ராம் சுதர்ஷன் படத்தொகுப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    காஸ்டியூம்

    கீர்த்தி வாசன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற காஸ்டியூம் டிசைன் செய்துள்ளார்.

    புரொடக்‌ஷன்

    தெர்ட் ஐ சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் ‘சூரகன்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    2023-12-07 16:34:42.0
    KALI RAJ

    ×